Tamil Cinema News | சினிமா செய்திகள்
சின்னத்திரையில் ராதிகாவின் புது அவதாரம்.. இதை எதிர்பார்க்கல
சமீப காலமாக பெரிய நடிகர்கள் அனைவரும் சின்னத்திரையில் வரும் ரியாலிட்டி ஷோக்களை தொகுத்து வழங்குவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனை முதன்முதலில் ஆரம்பித்து வைத்தவர் பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன். அவர் நடத்திய நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி நிகழ்ச்சியை அனைத்து மொழிகளிலும் அனைத்து முன்னணி நடிகர்களும் தொகுத்து வழங்கினர்.
தற்போது அதேபோல் அவர் ஹிந்தியில் தொகுத்து வழங்கிய குரோர்பதி நிகழ்ச்சியை அடிப்படையாகக் கொண்டு முழுக்க முழுக்க பெண்களுக்காக ஒரு தனியார் சேனலில் உருவாக்கப்பட்டு வருகிறது. இதனை பிரபல முன்னாள் நடிகை ராதிகா சரத்குமார் தொகுத்து வழங்க இருக்கிறார்.
சீரியலில் தமிழக தாய்மார்களின் மனதை வென்ற நடிகை ராதிகா சரத்குமார், தற்போது கோடீஸ்வரி என்ற பெயரில் பெண்களுக்கான புதிய கேம்ஷோ ஒன்றை தொகுத்து வழங்க இருக்கிறார் .
பெண்களுக்கான நிகழ்ச்சி என்பதால் மக்களிடையே பெரிய வரவேற்ப்பை பெறும். சமீபத்தில் இதற்கான போட்டோ ஷூட் நடந்து முடிந்துள்ளது. வருகிற டிசம்பர் மாதத்திலிருந்து இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாக இருக்கிறது. தற்போது இதற்கான ஆடிசன் நடந்து வருகிறது.
