Connect with us

Cinemapettai

நடிகை ராதிகாவுக்கு புற்றுநோயா?… இதோ அவரே சொன்ன பதில்..

Radhika Sarathkumar

Tamil Cinema News | சினிமா செய்திகள்

நடிகை ராதிகாவுக்கு புற்றுநோயா?… இதோ அவரே சொன்ன பதில்..

வெள்ளித்திரையில் இருந்து சின்னத்திரைக்கு வரும் வழியை தமிழில் ஏற்படுத்திய முக்கியமான நடிகை ராதிகா. சினிமா ஹீரோயினாக ஜொலித்த ராதிகா, கடந்த 1994-ம் ஆண்டில் சின்னத்திரைக்குள் அடியெடுத்து வைத்தார்.

பாரதி ராஜா இயக்கத்தில் கடந்த 1978-ம் ஆண்டு வெளியான கிழக்கே போகும் ரயில் படம் மூலம் தமிழில் அறிமுகமான ராதிகா, தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோயினாக ஜொலித்தார். நடிகை எம்.ஆர்.ராதாவின் மகளான ராதிகா, சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருந்த போது தமிழ், தெலுங்கு என பிஸியான நடிகையாக இருந்தார். சின்னத்திரையில் அடியெடுத்து வைத்த ராதிகா, தமிழ் சீரியல் உலகில் பல புதுமைகளைப் புகுத்தினார். பெண் கதாபாத்திரங்களை மையப்படுத்தி எடுக்கப்படும் சீரியல்கள் என்ற புதிய கான்செப்ட் ராதிகாவால் அறிமுகப்படுத்தப்பட்டது.

ராடான் மீடியா ஒர்க்ஸ் நிறுவனத்தின் முதல் தயாரிப்பு தெலுங்கில் ஈடிவியில் ஒளிபரப்பாகி ஹிட்டடித்தது. அதன்பின்னர், அப்போதைய ஜேஜேடிவி (தற்போது ஜெயா டிவி) ஒரு தொடரைத் தயாரித்தது அந்த நிறுவனம். அப்போதுதான் சன் டிவியில் பிரைம் ஸ்லாட்டைப் பிடித்தார் ராதிகா. இந்த சீரியலை பெரிய ஹிட்டாக்க வேண்டும் என தீவிரமாக உழைத்த ராதிகா, அப்போது கொண்டு வந்ததுதான் குடும்பப் பெண்களை மையமாக வைத்து சீரியல்கள் எடுக்க வேண்டும் என்ற கான்செப்ட். அப்படி அவர் தொடங்கிய சித்தி சீரியல் தமிழகத்தின் பட்டிதொட்டியெங்கும் அவரைக் கொண்டு சேர்த்தது. இதன் மூலம் தமிழ் தொலைக்காட்சி வரலாற்றில் முக்கியமான இடத்தைப் பிடித்த ராதிகா, அடுத்தடுத்த அத்தியாயங்களை எழுதத் தொடங்கினார். அவரது சித்தி சீரியல் வெளியாகி கிட்டத்தட்ட 10 ஆண்டுகளுக்கு மேலாகியும், இன்னும் அந்த தொடரின் டைட்டில் சாங் பலருக்கு மறக்காமல் இருப்பது அந்த சீரியலில் வெற்றிக்கான அத்தாட்சி.

நடிகர் சரத்குமாரைத் திருமணம் செய்துகொண்ட ராதிகாவுக்கு ஏற்கனெவே, இங்கிலாந்தைச் சேர்ந்த ரிச்சர்ட் ஹேட்லி என்பவர் மூலம் ரேயான் என்ற பெண் குழந்தை உண்டு. ரிச்சர்ட் மறைவுக்குப் பின்னர் தனியாக வசித்து வந்த ராதிகா, கடந்த 2000-த்துக்குப் பிறகுதான் சரத்குமாரைத் திருமணம் செய்துகொண்டார். அவர்களுக்கு ராகுல் என்ற மகன் இருக்கிறார். கடந்த ஆண்டு ஆகஸ்டில் ரேயானுக்குத் திருமணம் செய்துவைத்தார் ராதிகா. தற்போது, சன் டிவியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் வாணி-ராணி சீரியலில் நடிகை ராதிகா பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார்.

அவ்வப்போது தமிழ் சினிமாக்களில் நடித்து வருகிறார். ஏறக்குறைய 20 ஆண்டுகளுக்கு மேலாக நடித்து வரும் ராதிகா, தற்போது மாலை 6 மணிக்கு மேல் ஷூட்டிங்கில் கலந்துகொள்வதில்லையாம். குடும்பத்துடன் அதிக நேரம் செலவிட இந்த முடிவு. அதேபோல், ஞாயிற்றுக்கிழமைகளும் குடும்பத்துக்காகவே என்கிறார் அவர். ஒரு நடிகை, தயாரிப்பாளர், சீரியல் நடிகை என பல முகங்கள் கொண்ட ராதிகா, தனது குடும்பத்தைக் கவனித்துக் கொள்வதில் அதிக அக்கறை காட்டுகிறார்.
இந்தநிலையில், அவருக்கு கேன்சர் இருப்பதாக சமூக வலைதளங்களில் ஒரு தகவல் பரவியது. இதை ரசிகர் ஒருவர் டிவிட்டரில் அவரிடமே கேட்டுவிட, அந்த கேள்விக்கு ராதிகா இப்படி பதிலளித்துள்ளார். அதில் உண்மையில்லை. சிலரது கற்பனையாக அது இருக்கலாம் என்று அவர் பதில் கூறியிருக்கிறார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top