சரவணன் மீனாட்சி என்ற சீரியல் மூலம் டாப் சீரியல் நாயகி என்ற பட்டியலில் இடம்பெற்றவர் மீனாட்சி என்கிற ரச்சிதா. இவரது நடிப்பை தாண்டி இவர் அணியும் உடைகள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருக்கிறது என்று கூறிலாம்.

தற்போது அவர் தன்னுடைய ஃபேஷன் ரகசியம் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார்.

தமிழில் சீரியல்கள் நடித்தாலும் நான் பெங்களூரு பொண்ணு. சென்னையில் உடைகளோ, ஆபரணங்களோ அதிகமா வாங்குவதில்லை. பெங்களூருவில் இந்த மாதிரியான ஃபேஷன் பொருட்களுக்காகவே ஒரு பெரிய தெரு இருக்கு, அங்குதான் அதிகமா வாங்குவேன். ஆனாலும், பட்டுப் புடவைகள், சில்க் காட்டன் சேலைகள் மாதிரியான உடைகளை நல்லியில் வாங்குவேன்.

அதிகம் படித்தவை:  விஜய், அஜித் ஒருவரை ஒருவர் விட்டுக்கொடுக்காமல் இருப்பது நட்பின் வெளிப்பாடு.

பருத்திப் புடவைகள் எனக்கு ரொம்பப் பிடிக்கும். அதிலும் தரமான காட்டன், கட்டுறதுக்கு எளிதான காட்டன் புடவைகள் என்னோட முதல் தேர்வு. நிறைய கற்கள், மணிகள் வச்ச ப்ளவுஸ் எனக்கு ரொம்ப இஷ்டம். கொஞ்சம் ஒல்லியா இருக்கிறவங்க முக்கால் கை வைச்சு ப்ளவுஸ் தைச்சுப் போட்டா அது அவங்களை இன்னும் க்யூட்டா காட்டும்.

அதிகம் படித்தவை:  நடிகை நடிகர்களின் கலக்கலான மலேசிய நட்சத்திர கலைவிழா புகைப்படங்கள்!

ஆண்டிக் நகைகள் எனக்கு ரொம்பவே இஷ்டம். அதேமாதிரி மணிகள் கூட நம்மை அழகா காட்டும். மேக்கப்பில் மூலிகைப் பொருட்கள்தான் என்னோட முதல் தேர்வு என்று கூறியுள்ளார்.