Connect with us

Cinemapettai

நீண்ட நாட்களுக்கு பிறகு தனது மகளை சந்தித்த பிரியா பவானி சங்கர்.. லைக்ஸ் அள்ளுது

priya-cover

Tamil Cinema News | சினிமா செய்திகள்

நீண்ட நாட்களுக்கு பிறகு தனது மகளை சந்தித்த பிரியா பவானி சங்கர்.. லைக்ஸ் அள்ளுது

தமிழ் சினிமாவில் தற்போது மோஸ்ட் வாண்டட் ஹீரோயினாக அறியப்படுபவர் பிரியா பவானி சங்கர். ஒரு சீரியல் நடிகைக்கு சினிமாவில் இவ்வளவு பெரிய வரவேற்பு கிடைத்தது இதுதான் முதல் தடவை.

விஜய் டி.வி-யில் கல்யாணம் முதல் காதல் வரை என்ற சீரியலில் ஒரு குழந்தைக்கு அம்மாவாக நடித்து அதை இளைஞர்கள் மத்தியில் ரசிக்க செய்தவர் பிரியா. அதன் பிறகு கார்த்திக் சுப்பராஜ் தயாரித்த மேயாதமான் திரைப்படத்தில் ஹீரோயினாக அறிமுகமானார்.

அந்தப் படத்திற்கு பிறகு கிடைத்த வரவேற்பால் தொடர்ந்து சினிமாவில் கவனம் செலுத்தி வருகிறார். அதன்பிறகு கார்த்தி நடிப்பில் வெளியான கடைக்குட்டி சிங்கம் திரைப்படம் இவரின் மார்க்கெட்டை தூக்கி நிறுத்தியது. தொடர்ந்து எஸ்.ஜே. சூர்யா உடன் நடித்த மான்ஸ்டர் திரைப்படம் பெரும் வரவேற்பை பெற்றது.

அதன் விளைவு தற்போது பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பை பெற்றிருக்கிறார். இந்நிலையில் சீரியலில் தனக்கு மகளாக நடித்த குழந்தையுடன் எடுத்த செல்பி புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இதற்கு லைக்குகள் குவிகின்றன.

https://www.instagram.com/p/B5W7UvVBljb/?utm_source=ig_web_copy_link

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top