Connect with us

Cinemapettai

குடிக்கு அடிமையாகி காசை பறிகொடுத்த பிரபல நடிகை.. மின்னல் வேகத்தில் காப்பாற்றிய போலீஸ்

priya-banerjee

Tamil Cinema News | சினிமா செய்திகள்

குடிக்கு அடிமையாகி காசை பறிகொடுத்த பிரபல நடிகை.. மின்னல் வேகத்தில் காப்பாற்றிய போலீஸ்

விதார்த் மற்றும் ராதிகா ஆப்தே நடித்த சித்திரம் பேசுதடி 2 படத்தில் இரண்டாவது ஹீரோயினாக நடித்தவர் பிரியா பானர்ஜி. இவர் தெலுங்கிலும் சில திரைப்படங்களில் நடித்துள்ளார். மேலும் தற்போது பாலிவுட் சினிமாக்களிலும் கவனம் செலுத்தி வருவதால் மும்பையில் டேரா போட்டுள்ளார்.

ஏற்கனவே மதுப்பழக்கத்திற்கு அடிமையான இந்த நடிகையை பயன்படுத்தி பல ஆயிரம் ரூபாய் ஆட்டையை போட்ட மர்ம நபரை போலீசார் வலைவீசி தேடி வருவது செய்தி கேட்டு பாலிவுட் திரையுலகமே உஷாராகி உள்ளது.

நடிகை மது குடிக்க நினைத்து ஆன்லைனில் ஆர்டர் செய்து உள்ளார். அதற்கு தன்னுடைய கிரெடிட் கார்டு தகவல்கள் மொத்தத்தையும் கொடுத்துள்ளார். இதனை பயன்படுத்தி சுமார் 32,000 வரை எடுத்துள்ளார் அந்த நபர்.

இதனால் அதிர்ச்சியடைந்த நடிகை உடனடியாக அந்த நபரை தொடர்பு கொண்டார். அவரும் தன்னுடைய தரப்பில் ஏதோ தவறு நடந்து விட்டது என நல்லவர் போல் கூறி, உங்களுடைய G – PAY அக்கவுண்ட் நம்பர் கொடுங்கள், நான் திருப்பி கொடுக்கிறேன் எனவும் போக்கு காட்டி உள்ளார்.

அதையும் நம்பி அந்த தகவலையும் அவருக்கு பிரியா கொடுத்தார். அதை ஃப்ரீயா கொடுத்ததாக நினைத்துக் கொண்டு மேற்கொண்டு 20,000 வரை சுருட்டி உள்ளார் அந்த நபர். உடனடியாக காவல் துறையை தொடர்பு கொண்ட நடிகை, பிரச்சனையை கூற, காவல்துறையினர் உடனடியாக சம்பந்தப்பட்ட வங்கிக்கு போன் செய்து அந்த பணபரிமாற்ற சேவையை நிறுத்தியுள்ளனர்.

இதனால் நடிகையின் பணம் காப்பாற்றப்பட்டது. மேலும் யார் அந்த மர்ம நபர் என போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். இந்த வேகத்தை குடியுரிமை பிரச்சனையில் ஈடுபட்டுள்ள மாணவர்களைக் காப்பாற்ற போலீசார் காட்டலாமே என சமூக வலைதளங்களில் பலர் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top