பெரிய ஹீரோக்கள், தயாரிப்பாளர்களே அன்புச்செழியனுக்கு எதிராக குரல் குடுக்க தயங்கும் சூழலில். நடிகை பூர்ணா தன் ட்விட்டர் பக்கத்தில் மிக காட்டமாக திட்டியுள்ளார்.

இயக்குநர் மற்றும் நடிகர் சசிகுமாரின் உறவினர் அசோக்குமார் கந்து வட்டிக் கொடுமையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தற்கொலைக்கு ஃபைனான்சியர் அன்புச்செழியன் தான் காரணம் என அவரே கைப்பட கடிதம் எழுதி வைத்துள்ளார்.

சினிமா நட்சத்திரங்கள் முதல் ரசிகர்கள் வரை பலரும் வருத்தப்பட்டு சமூக வலைத்தளங்களில் ஃபைனான்சியர் அன்புச்செழியனுக்கு எதிராகப் பேசி வருகின்றனர்.

பூர்ணா

பூர்ணா கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர். இவர் இயற்பெயர் ஷாம்னா காசிம், சிறந்த டான்சர். நடன நிகழ்ச்சி வாயிலாக பிரபலம் அடைந்து அதன் பின் மலையாள சினிமாவில் நுழைந்தவர். முனியாண்டி விலங்கியல் மூன்றாம் ஆண்டு, கந்தகோட்டை, துரோகி, ஆடு புலி போன்ற தமிழ்த் திரைப்படங்களில் நடித்துள்ளார். மேலும் மலையாளம் மற்றும் தெலுங்கு மொழித் திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

Poorna

அசோக் குமாரின் இணைத்தயாரிப்பில், சசிகுமாரின் கோடி வீரன் படத்தில் மூன்று நாயகிகளில் ஒரு நாயகியாக இவரும் நடித்துள்ளார்.அசோக்குமார் தற்கொலை செய்த உடனேயே அவருடைய ட்விட்டரில்,

‘அசோக் சார், நீங்கள் சிறந்தவரிலும் சிறந்தவர். நீங்கள் நல்ல மனம் கொண்டவர் என்பது எனக்குத் தெரியும். நீங்கள் எங்களை விட்டுப் போக முடியாது, நீங்கள் எங்களுடனேயே இருப்பீர்கள்.’ என ட்வீட் செய்தார்.

மூன்று நாட்களுக்கு முன்பே மற்றொரு ட்வீட்டும் செய்திருந்தார் பூர்ணா.
‘அன்புச்செழியன் போன்ற … நமது சினிமாவில் இருக்கக் கூடாது,’

ஃபைனான்சியர் அன்புச்செழியனிடம் பணம் வாங்கி படமெடுத்த சில தயாரிப்பாளர்கள் நிர்ப்பந்தத்தால் ஒன்று கூடி, அசோக் குமாருக்கு அஞ்சலிக் கூட்டம் நடத்தாமல் பைனான்சியரைக் காப்பாற்றுவதற்காக அவருக்கு ஆதரவாகப் பேசி வருகின்றனர் என்று நடிகை பூர்ணா கூறிவருகிறார்.

அதிகம் படித்தவை:  'ஹாப்பி பர்த்டே என் தங்கமே' - நயன்தாராவுக்கு பிறந்த நாள் வாழ்த்து சொல்லும் விக்னேஷ் சிவன்.
Poorna

இந்நிலையில் மிகவும் மன வேதனையில் பூர்ணா போட்ட அடுத்த ட்வீட் “இந்த உலகை விட்டு சென்று விட்டார் அசோக், நாம் செய்ய வேண்டியது, அனைவரும் ஒன்று கூடி இருந்து அந்த ****** அன்புச் செழியனுக்கு மிக பெரிய தண்டனை வாங்கி தர வேண்டும்.”

ஆனால், அன்புச்செழியன் அரசியல்வாதிகளின் ஆதரவோடு இருக்கிறாரே என ரசிகர் ஒருவர் பூர்ணாவிற்கு ரிப்ளை செய்தார். ‘கடவுள் என ஒருவர் இருக்கிறார். அசோக் குடும்பத்தைப் போலவே இவருக்கும் ஒரு குடும்பம் இருப்பதால் யோசிக்கிறார் என நினைக்கிறேன். அந்தக் கண்ணீர் பதில் சொல்லும் அந்த ********'” என்று கெட்டவார்த்தையில் திட்டியுள்ளார் பூர்ணா.

Poorna with her new style in Dubai

அவர் எழுதிய கடிதத்தில் யார் அவரை டார்ச்சர் செய்தது என்று குறிப்பிட்டுள்ளார். இந்த அனைத்து ****** காரணம் அந்த அன்புச்செழியன் , அவன் தண்டிக்க பட வேண்டும்.”என ட்வீட் செய்தார்.

பைனான்சியர் அன்புச்செழியனுக்கு ஆதரவாக சீனு ராமசாமி, விஜய் ஆன்டனி, சுந்தர் சி, தேவயானி, மனோபாலா, கலைப்புலி தாணு உள்ளிட்ட பலரும் ஆதரவாக பேசி வருகின்றனர்.

இந்த நிலையில் கேரளாவிலிருந்து வந்துள்ள ஒரு நடிகை பின் விளைவுகள் எதைப் பற்றியும் கவலைப்படாமல் இப்படி தைரியமாக ட்வீட் செய்திருப்பது ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அவர்களின் ஆதரவும் பூர்ணா பக்கம் திரும்பியுள்ளது.