பரபரப்புக்கு பெயர் பெற்ற கவர்ச்சி நடிகை பூனம் பாண்டே அதிக படங்களில் நடிக்காவிட்டாலும் ஏதாவது ஒன்றை செய்து அடிக்கடி பரபரப்புகளை உருவாக்கி வருவார்.

முன்னதாக மும்பை சாலையில் ஆபாச உடை அணிந்து சாலையில் போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்தினார். ரசிகர்களுக்கு ஹோலி பண்டிகை வித்தியாசமாக வாழ்த்து தெரிவித்து இருந்தார்.

மும்பை சாலையில் கவர்ச்சி நடிகை பூனம் பாண்டே குழந்தைகளுக்கு ரெயின் கோர்ட் வழங்கினார்

இந்த நிலையில் நேற்று மும்பையில் ஏழைகள் அதிகம் வாழும் பகுதிக்கு பூனம் பாண்டே வந்தார். அந்த பகுதியில் பெருசுகள் முதல் இளசுகள் வரை கூடினர். ஆனால் அந்த பகுதியில் வசிக்கும் குழந்தைகளை அழைத்து தான் வாங்கி வந்த ரெயின் கோர்ட்டுகளை கொடுத்து அவர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார்.

இருந்த போதிலும் போலீசார் பூனம் பாண்டே வந்த தகவலையடுத்து தலைதெறிக்க ஒடி கூட்டம் சேராமல் தடுத்தனர். ஏதாவது செய்வார் என எதிர்பார்த்த அனைத்து இளைஞர்களுக்கும் ஏமாற்றம் தான் மிச்சம்…