Tamil Cinema News | சினிமா செய்திகள்
ஆர்யாவின் திருமணத்திற்கு வராத முன்னாள் காதலி.. எத்தனை பேரு? பரபரப்புத் தகவலை வெளியிட்ட பூஜா
சமீபத்தில் நடந்து முடிந்த ஆர்யா சாயிஷாவின் திருமணத்திற்கு ஆர்யாவின் முன்னாள் காதலியான பூஜா ஏன் வரவில்லை என்ற காரணத்தை தற்போது பேட்டியில் தெரிவித்துள்ளார்.
ஆர்யாவும் பூஜாவும் முதன்முதலில் உள்ளம் கேட்குமே என்ற திரைப்படத்தில் தான் சேர்ந்து நடித்தனர். அதன்பிறகு ஓரம் போ என்ற திரைப்படத்தின் மூலம் நெருக்கம் அதிகமானது. இதனை தொடந்து மேலும் 2 படங்களில் ஜோடியாக நடித்தனர்.
இவர்களது உரசல்களைப் பற்றி தமிழ் சினிமாவில் பேசாத ஆட்களே கிடையாது. அப்படிப்பட்டவர்கள் திடீரென பிரிந்து விட்டனர். காரணமும் தெரியவில்லை. பூஜாவும் தமிழ் சினிமாவில் நடிப்பதை நிறுத்திவிட்டு இலங்கை சினிமாவில் நடிக்க ஆர்வம் காட்டினார்.
கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு இலங்கையைச் சேர்ந்த தமிழ் தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆகிவிட்டார். ஆனால் ஆர்யா, பூஜாவை விட அன்பே ஆருயிரே படத்தில் நடித்த நிலா என்பவரை காதலித்ததாக அவர் தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஆர்யா.. என்னப்பா இதெல்லாம்? ப்ளேபாய் தெரியும்.. ஆனா இந்த அளவுக்குனு தெரியாம போச்சு
