Tamil Cinema News | சினிமா செய்திகள்
கமல் ஒரு மேஜிக் மேன்.. அவருடைய அணுகுமுறையே வேற மாதிரி இருக்கும்.. பூஜா குமார்
கமலஹாசனின் சமீபத்திய குடும்ப போட்டோவில் இடம் பெற்ற பின் கூகுளில் அதிகம் தேடப்படும் நாயகியாக மாறிவிட்டார் பூஜாகுமார். மேலும் கமலை பற்றி பேசுகையில் அவரது முகத்தில் அப்படியொரு புன்னகை மலர்கிறது.
சமீபத்திய பேட்டியில் அவர் கூறியதாவது, கமலஹாசனை போல சிறந்த படைப்பாளி யாராலும் ஆக முடியாது. நான் தொடர்ந்து ஐந்து வருடமாக அவருடன் பணியாற்றி வருகிறேன். அவரைப்போல் தொழில் பக்தி கொண்டவர் யாரும் இல்லை. இறைவன் நம்பிக்கை இல்லை என்றாலும் இறைவனின் அனைத்து அருளும் அவருக்கு கிடைத்துள்ளது.
ஒரு சின்ன விஷயத்தை கூட நுணுக்கத்துடனும் அதேசமயம் கவனத்துடனும் கையாள்வார். எனக்கு பொறுமையா இருக்கிறது எப்படி என்று கற்றுக் கொடுத்ததே அவர்தான் என்றும் ஒரே நேரத்தில் அரசியல், சினிமா, டிவி ஷோ என செய்தாலும் அனைத்திலும் சிறப்பாக செய்யக்கூடிய திறமை அவருக்கு உண்டு எனவும் புகழ்ந்துள்ளார்.
மேலும் அவர் ஒரு மேஜிக் மேன் என்று கடைசியில் ஒரு செக் வைத்துள்ளார். இதில் சந்தேகம் அடைந்த நெட்டிசன்கள் எல்லாத்திலேயும் அவர் ஒரு மேஜிக் மேன் தான் மேம் உங்களுக்கு என்று பூஜா குமாரை கலாய்த்து வருகின்றனர்.
