Connect with us
Cinemapettai

Cinemapettai

பிரபல தியேட்டருக்கு நடந்த அவலமான நிலை.. வெறும் பாப்கார்னை டிக்கெட் விலைக்கு வித்தா இப்படி தான்!

movie-theater

Tamil Cinema News | சினிமா செய்திகள்

பிரபல தியேட்டருக்கு நடந்த அவலமான நிலை.. வெறும் பாப்கார்னை டிக்கெட் விலைக்கு வித்தா இப்படி தான்!

கொரோனா வைரஸ் பாதிப்பின் காரணமாக பல்வேறு துறைகள் நஷ்டம் அடைந்தனர். அதில் பெரும் பாதிப்புக்கு உள்ளானது  திரையுலகமும் திரையரங்கு உரிமையாளர்களும் தான்.

சமீபத்தில் திரையரங்குகள் திறப்பதற்கான அனுமதியை தமிழக அரசு அளித்தது. ஆனாலும் தியேட்டர்களுக்கு வரும் பார்வையாளர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாக தான் உள்ளது.

இதனால் தான், பெரிய நடிகர்களின் படங்கள் எதுவும் இதுவரை திரையிடப்படவில்லை. மேலும் ஒரு காட்சிக்கும் 5 முதல் 10 பார்வையாளர்கள் மட்டுமே வருவதால் பெரும்பாலான காட்சிகள் ரத்து செய்யப்படுகிறது என்றும் தகவல்கள் கிடைத்துள்ளன.

இந்த நிலையில் சத்யம் தியேட்டரில் படம் பார்க்க சென்ற நடிகை காயத்ரி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சத்யம் தியேட்டரின் புகைப்படத்தை பதிவிட்டு, அது மோசமான நிலையில் உள்ளதாக தெரிவித்துள்ளார்.

அந்த பதிவில் காயத்ரி , ‘சமீபத்தில் நானும், எனது தோழியும் சத்யம் தியேட்டருக்கு படம் பார்க்க போனபோது, எங்க ரெண்டு பேரையும் சேர்த்து அங்க மூணு பேர்தான் படம் பார்த்தோம். இது ரொம்ப கஷ்டமா இருக்கு’ என்று குறிப்பிட்டு இருக்கிறார்.

அதுமட்டுமில்லாமல் அந்த பதிவில், இருவரும் தனியாக தியேட்டர்களில் எடுத்துக் கொண்ட புகைப்படத்தையும் காயத்ரி பதிவுசெய்து உள்ளார்.

Gayathri

Gayathri

என்னதான் இந்த விஷயம் காமெடியாக இருந்தாலும், ஒரு பக்கம் திரையரங்குகளின் மோசமான நிலையை எடுத்துக்காட்டுகிறது.

மேலும் இந்த நிலை எப்போது மாறும் என்ற இயக்கத்தில் தவித்துக் கொண்டிருக்கின்றனர் பல தியேட்டர் உரிமையாளர்கள்.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
To Top