6வது முறையாக திருமணம் செய்துகொண்ட பிரபல நடிகை.. எல்லாம் விவாகரத்து காசுக்குத்தான்!

உலகமே போற்றும் நடிகைகளில் ஒருவரான அந்த நடிகை சமீபத்தில் தன்னுடைய ஆறாவது திருமணத்தை நடத்தி முடித்துள்ளார். அது மட்டுமில்லாமல் தன் வாழ்நாளில் இன்னும் அதிக திருமணம் செய்ய ஆசைப் படுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

1990 முதல் ஹாலிவுட் சினிமாவில் நடித்து வருபவர் தான் பமீலா ஆண்டர்சன். இவர் முதல் முறையாக 1995 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். அதனைத் தொடர்ந்து 1998 ஆம் ஆண்டு விவாகரத்து செய்து கொண்டார்.

பின்னர் 8 வருடங்கள் கழித்து 2006ஆம் ஆண்டு பாடகர் ஒருவரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். அவருடன் அடுத்த வருடமே விவாகரத்து பெற்று பிரிந்து விட்டார். ஒரு விளையாட்டு வீரர் மீது ஆசை கொண்டதால் விவாகரத்து செய்த அதே ஆண்டு உடனடியாக அவரை மூன்றாவதாக திருமணம் செய்து கொண்டார்.

அடுத்த ஏழு வருடங்கள் அவருடன் வாழ்ந்து வந்தார். பின்னர் விவாகரத்து பெற்ற அதே விளையாட்டு வீரருடன் அதே வருடம் நான்காவது முறையாக திருமணம் செய்து கொண்டார். ஆனால் அடுத்த ஆறு மாதத்திலேயே இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து விட்டனர்.

அதன்பிறகு ஐந்தாவதாக ஹாலிவுட் படமான பேட்மேன் படத்தை தயாரித்தவரை திருமணம் செய்து கொண்டார். ஆனால் திருமணமான அடுத்த 12வது நாளே அவரை பிரிந்து விட்டாராம். அந்த தயாரிப்பாளருக்கு கிட்டதட்ட 75 வயது இருக்கும்.

தற்போது 6வது முறையாக தன்னுடைய நீண்ட நாள் பாடிகார்டை திருமணம் செய்து கொண்டார் பமீலா ஆண்டர்சன். இவர்களது புகைப்படம் தான் தற்போது இணையதளங்களில் வைரலாகி உள்ளன. மேலும் இந்த திருமணம் எத்தனை நாளைக்கு இருக்குமோ எனவும் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

pameela-anderson-6th-marriage
pameela-anderson-6th-marriage

ஹாலிவுட் சினிமாவை பொருத்தவரை இதெல்லாம் சர்வ சாதாரணம் தான். பெரும்பாலும் திருமணம் செய்துகொண்டு விவாகரத்து செய்தால் அதன் மூலம் வருமானம் கிடைக்கும் என்பதால் கூட பமீலா ஆண்டர்சன் இப்படி செய்யலாம் எனவும் ஹாலிவுட்டில் கிசுகிசுக்கின்றனர்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்