Connect with us
Cinemapettai

Cinemapettai

vijay-thalapathy

Tamil Cinema News | சினிமா செய்திகள்

தளபதியுடன் நாலாவது முறையாக ஜோடி போடும் நடிகை! லீக்கான மாஸ் அப்டேட்!

தமிழ் சினிமாவில்  உச்ச நட்சத்திரமாக ஜொலித்து கொண்டிருப்பவர் தான் தளபதி விஜய். தற்போது இவர் நடிப்பில் மாஸ்டர் படம் தயாராகி ரிலீசுக்காக காத்திருக்கிறது.

இந்த நிலையில் விஜய் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ‘தளபதி 65’ என்ற படத்தில் நடிக்க உள்ளார் என்ற தகவல் கிடைத்துள்ளது.

மேலும் இந்தப் படத்தை ஆர் முருகதாஸ் இயக்க உள்ளதாக தகவல்கள் வெளியானநிலையில், சில காரணங்களால் அவர் அப்படத்திலிருந்து நீக்கப்பட்டார் என்றும் கூறப்பட்டது. இதனால் இந்தப் படத்தின் இயக்குனருக்கான தேடுதல் வேட்டை மும்மரமாக நடந்து  கொண்டிருக்கிறதாம்.

இவ்வாறிருக்க, தற்போது ‘தளபதி 65’ படத்தில் ஹீரோயினாக நடிக்க உள்ள நடிகை பற்றிய தகவல் இணையத்தில் கசிந்துள்ளது.

அதாவது ‘தளபதி 65’ படத்தில் கதாநாயகியாக காஜல் அகர்வால், ராஷ்மிகா மந்தனா ஆகியோரில் யாராவது இருக்கலாம் என பலர் கூறியிருந்தனர்.

ஆனால் தற்போது ‘தளபதி 65’ படத்தின் கதாநாயகியாக நடிகை சமந்தா நடிக்க உள்ளார் என்ற தகவல் கிடைத்துள்ளது. ஏனெனில் நடிகை சமந்தாவின் விக்கிபீடியாவில் அவர் அடுத்ததாக நடிக்கவிருக்கும் படங்களின் லிஸ்டில் ‘தளபதி 65’ சேர்க்கப்பட்டுள்ளது என கூறப்படுகிறது.

vijay-thalapathy65

vijay-thalapathy65

இந்த செய்தி உண்மையாக இருந்தால் கத்தி, தெறி, மெர்சல் ஆகிய படங்களைத் தொடர்ந்து விஜயும் சமந்தாவும் இணையும் நாலாவது படமாக ‘தளபதி 65’ அமையும் என்பது குறிப்பிடத்தக்கது.

samantha-cinemapettai

samantha-cinemapettai

எனவே, ‘தளபதி 65’ படத்திற்கான படக்குழுவினரை பற்றிய அதிகாரப்பூர்வமான அறிவிப்பை எதிர்நோக்கி காத்துக் கொண்டிருக்கின்றனர் விஜய் ரசிகர்கள்.

Continue Reading
To Top