சனிக்கிழமை, டிசம்பர் 14, 2024

நடிகை பத்மினி மகன் என்ன செய்கிறார் தெரியுமா? இவ்வளவு பெரிய உத்தியோகத்திலா இருக்கிறார்

தமிழ் சினிமாவின் உச்சநட்சத்திரமாக வளம் வந்தவர் நடிகை பத்மினி. அந்த காலத்தில் இவருக்கு என்று தனி ரசிகர் பட்டாளமே இருந்தது. எம் ஜி ஆர், சிவாஜி போன்ற இரண்டு மாபெரும் நடிகர்களுடன் போட்டி போட்டு நடித்தவர் இவர்.

தனது நடனத்தாலும், வசீகர தோற்றம் மற்றும் நடிப்பாலும் ஒட்டுமொத்த ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்தவர். இவரை வெறுப்பவரே அந்த காலத்தில் இல்லை என்று சொல்லலாம். கதகளி, குச்சிப்புடி, பரதநாட்டியம், மோகினியாட்டம் போன்ற நடனக்கலைகளை முறையே பயின்று தேர்ந்தவர் நடிகை பத்மினி.

இவரது சகோதரிகள் லலிதா, ராகினியும் புகழ்பெற்ற நாட்டிய நடிகைகள் தான். இவர்களை திருவாங்கூர் சகோதரிகள் என்று தான் அழைப்பார்கள். மூவரும் பார்ப்பதற்கும் ஒரே போல இருப்பார்கள். தனது 7 வயதிலேயே நாட்டிய அரங்கேற்றம் முடித்த பத்மினி, தனது 17 வயதில் கல்பனா என்ற இந்தி படத்தின் மூலம் சினிமா துறைக்குள் நுழைந்தார்.

இவர் மகன் என்ன செய்கிறார் தெரியுமா?

ஒரு காலத்தில் உச்ச நட்சத்திரமாக இவர் இருந்தாலும், 250 படங்களுக்கு மேல் நடித்து பல விருதுகளை வாங்கி இருந்தாலும், காலப்போக்கில் இவர் சினிமாவில் இருந்து ஒதுங்கி, தனது வாழ்க்கையை கவனிக்க ஆரம்பித்து விட்டார். இந்த நிலையில் கடைசியாக இவர் நதியாவுக்கு பாட்டியாக பூவே பூ சூடவா படத்தில் நடித்தார்.

திருமணத்திற்கு பின் அமெரிக்காவில் செட்டில் ஆன இவர் அங்கு ஒரு நடன பள்ளியை தொடங்கி பலருக்கு நடனங்களை சொல்லி கொடுத்தார். இவருக்கு பிரேம் ஆனந்த் என்று ஒரு மகனும் உள்ளார். 1986 ஆம் ஆண்டு வெளிவந்த “உதயம் பதின்ஜாரு’ என்ற மலையாள படத்தில் நடித்த பத்மினியின் மகன், அதற்கு பிறகு எந்த படத்திலும் நடிக்கவில்லை.

மேலும் பிரேம் ஆனந்த், உலகப் புகழ்பெற்ற டைம் ஆங்கில பத்திரிக்கையில் பத்திரிகையாளராகவும், தயாரிப்பு நிறுவனமான வார்னர் பிரதர்ஸ் நிறுவனத்திலும் பணிபுரிந்துள்ளார். சினிமாவில் பெரிய அளவில் வரவில்லை என்றாலும், ஆங்கில தயாரிப்பு நிறுவனத்தில் இவர் பணி புரிந்துள்ளார். இது பலருக்கு வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

- Advertisement -

Trending News