பாலிவுட் நடிகர் டைகர் ஷ்ராஃப் உடன் இணைந்து முன்னா மைக்கேட் என்ற பாலிவுட் படத்தில் நடித்துள்ளார். தற்போது வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவரான நிதி அகர்வால், மகாராஷ்டிரா மாநிலம் மும்பையின் பாந்த்ரா பகுதியில் தனது தோழியுடன் வாடைகை வீட்டில் வசித்து வந்துள்ளார். நிதி அகர்வால் நடிகை என்பதாலும், அவருக்கு திருமணம் ஆகாததாலும் வீட்டை விட்டு வெளியேறுமாறு வற்புறுத்தப்பட்டுள்ளார்.

பாலிவுட்டில் நடிகையாக வேண்டும் என்ற கனவோடு பலர் மும்பை வருகின்றனர். ஆனால், மும்பையில் அவர்களுக்கு வீடு கிடைப்பதில்லை. அதுவும் நடிகை என்றாலே பயந்து ஓடுகிறார்கள். குறிப்பாக வளர்ந்து வரும் நடிகைகள் தவறான வழியில் பணம் சம்பாதிப்பதாக பலரும் நம்புகின்றனர்.

நடிகை என்பதை தாண்டி வீடு கொடுக்காமல் இருக்க மதமும் ஒரு காரணமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. பிரபல நடிகையாக வருவதற்கு முன்னர் காசு கொடுத்து வீடும் வாங்க முடியாது. அதனால், வாடகைக்கு வீடு எடுத்து தான் தங்க வேண்டிய சூழ்நிலை தான் தற்போது வளர்ந்து வரும் ஹீரோயின்களுக்கு உருவாகி வருகிறது.