Connect with us
Cinemapettai

Cinemapettai

அஜித்துக்கு ஜோடியாக வலிமை படத்தில் ரஜினி பட நடிகை?

thala-ajith

Tamil Cinema News | சினிமா செய்திகள்

அஜித்துக்கு ஜோடியாக வலிமை படத்தில் ரஜினி பட நடிகை?

அஜித்துக்கு ஜோடியாக வலிமை படத்தில் ரஜினியின் காலா படத்தில் நடித்த ஹூமா குரேஷி நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

விஸ்வாசம், நேர்கொண்ட பார்வை என அடுத்தடுத்து இரண்டு தரமான ஹிட் படங்களை கொடுத்த அஜித் அடுத்ததாக தனது 60வது படமான வலிமை படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை ஹெச் வினோத் இயக்கி வருகிறார். போனி கபூர் தயாரிக்கிறார்.

யுவன் சங்கர் ராஜா இசையமைத்து வருகிறார். இந்த படத்தில் நடிகர் அஜித் போலீஸ் வேடத்தில் நடித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. ஹைதராபாத்தில் உள்ள ராமேஜிராவ் ஃபிலிம் சிட்டில் முதற்கட்ட படப்பிடிப்பு நடந்தது. படத்தில் நடித்து வரும் நடிகர் மற்றும் நடிகைகள் குறித்த விவரங்களை வெளியிடாமல் படக்குழு ரகசியம் காத்து வருகிறது.

இந்த படத்தில் பிரசன்னா முக்கிய வேடத்தில் நடிப்பதாக சொல்லப்பட்டது. ஆனால் அவர் அதை மறுத்துவிட்டார். இந்நிலையல் அஜித்துக்கு ஜோடியாக யாமி கௌதம் நடிப்பதாக கூறினார்கள். அதுவும் இல்லையாம். ரஜினியின் காலா படத்தில் நடித்த ஹூமா குரேஷி நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

huma

huma

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top