விலங்குகள் நல அமைப்பான, பீட்டா எதிர்ப்பால், தமிழகத்தில், இரண்டு ஆண்டுகளாக, ஜல்லிக்கட்டு நடைபெறவில்லை. இந்தாண்டு, ஜல்லிக்கட்டு நடக்குமா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ள நிலையில், தடையை மீறி நடத்த வேண்டும் என்ற குரல் எழுந்துள்ளது.அதில், கமல், சிம்பு, ஜீ.வி.பிரகாஷ்குமார், கருணாஸ் உள்ளிட்டோரும் சேர்ந்து குரல் கொடுத்துள்ளனர். அவர்களை மிஞ்சும் விதமாக, நடிகை நிவேதா பெத்துராஜ், ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து, டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். அதில், நான் தமிழ் பெண். ஜல்லிக்கட்டை பற்றி எனக்கு தெரியும். இந்தாண்டு, ஜல்லிக்கட்டு நடக்க வேண்டும் என, குறிப்பிட்டுள்ளார்.மதுரையில் பிறந்த போதிலும், துபாயில் படித்து வளர்ந்த நிவேதா, மிஸ் இந்தியா துபாய் பட்டம் பெற்றவர்.

https://twitter.com/nivethapethuraj/status/816614305915289601