Tamil Cinema News | சினிமா செய்திகள்
நிக்கி கல்ராணியின் முதுகில் குத்திய டாட்டூ.. அட, அது யார் பெயர் தெரியுமா?
இன்றைய தலைமுறையினர் அனைவரும் டாட்டூ குத்துவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். அன்றைய காலத்து நம் பாட்டிமார்கள் பச்சை குத்துவதை தான் இந்த காலத்தில் டாட்டூ என ஸ்டைலாக கூறி வருகின்றனர்.
ஆண்கள் முதல் பெண்கள் வரை குறிப்பாக இளம் வயதினர் இந்த மோகத்தில் திளைத்து வருகின்றனர். எவ்வளவு வலியாக இருந்தாலும் பொறுத்துக் கொண்டு டாட்டூ போட்டால் தான் கெத்து என வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.
ஒரு சிலர் டிசைனாக போடுவார்கள், ஒரு சிலர் தாங்கள் யாரை விரும்புகிறோமோ அவர்களின் பெயர்களை பச்சை குத்தி கொள்வார்கள். அந்த வகையில் குறைந்த படங்களில் நடித்தாலும் நிறைந்த பெயருடன் வலம் வரும் நடிகை நிக்கி கல்ராணி அதே வேலையைத்தான் செய்துள்ளார்.
இவர் தனது முதுகில் பச்சை ஒன்றை குத்தியுள்ளார். அது என்னவாக இருக்கும் என பலர் யோசித்துக் கொண்டிருக்கும் நிலையில் தற்போது அதற்கான விடை கிடைத்துவிட்டது. அந்த டாட்டூவில் இருக்கும் பெயர் பிரபல நடிகையும் நிக்கி கல்ராணியின் தங்கையுமான சஞ்சனா கல்ராணி யின் பெயர்தான். சஞ்சனாவின் மற்றொரு பெயர் அர்ச்சனா.

nikki-galrani-tattoo
இவன் கொஞ்சம் வித்தியாசமான ஆள்தான்.!
