Tamil Cinema News | சினிமா செய்திகள்
போதையில் சக நடிகையின் மண்டையை உடைத்த நிக்கி கல்ராணியின் தங்கை.. பாரதி கண்ட புதுமைப்பெண்
சினிமா பிரபலங்கள் பல்லு விளக்காமல் கூட இருப்பார்கள், ஆனால் சனிக்கிழமை பார்ட்டி செய்யாமல் இருக்கமாட்டார்கள் என சந்தானம் சொல்வதைப்போல இளம் நடிகை ஒருவர் போதையில் சக நடிகையின் மண்டையை உடைத்த செய்தி பரபரப்பை கிளப்பியுள்ளது.
தமிழ் சினிமாவில் பிரபலமான நாயகி நிக்கி கல்ராணி. தற்போது இவரது தங்கை சஞ்சனா கல்ராணி விஜய் டிவி புகழ் ராமருடன் ஒரு படம் நடித்து வருகிறார். இந்த படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் சமீபத்தில் பெங்களூருவில் உள்ள ஒரு ஸ்டார் ஹோட்டலுக்கு பார்ட்டி செய்ய சஞ்சனா பிரபல கன்னட தயாரிப்பாளர் வந்தனா என்பவருடன் சென்றுள்ளார். திடீரென எங்கிருந்தோ வந்த இரண்டு பெண்கள் சஞ்சனாவிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதனால் அருகிலுள்ள மது பாட்டிலால் அவர்களது மண்டையை உடைத்ததாக அருகில் உள்ள காவல் நிலையத்தில் அந்த பெண்கள் புகார் அளித்துள்ளனர். ஆனால் சஞ்சனாவின் தரப்பில் வாக்குவாதம் மட்டுமே நடந்தது எனவும், வன்முறை எதுவும் நடக்க வில்லை எனவும் கூறியுள்ளனர்.
இருந்தும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். குடி குடியை கெடுக்கும், குடிப்பழக்கம் உடல் நலத்தை கெடுக்கும்.
