Tamil Cinema News | சினிமா செய்திகள்
எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன்.. பால் கொழுக்கட்டை அழகு எங்கே போச்சு நிக்கி கல்ராணி
தமிழ்சினிமாவில் நன்றாக கொழுகொழுவென இருக்கும் நடிகைகளை தான் ரசிகர்கள் பெரிதும் விரும்புவர். அந்தவகையில் ஹன்சிகா, குஷ்பூ, கீர்த்தி சுரேஷ் போன்றோர் ஆல்டைம் ஃபேவரைட் லிஸ்டில் இருந்தனர். ஆனால் திடீரென உடல் எடையை குறைத்த ஹன்சிகா மற்றும் கீர்த்தி சுரேஷ் தற்போது அந்த பட்டியலில் இருந்து காணாமல் போய்விட்டனர்.
அந்தப் பட்டியலில் புதிதாக இணைந்துள்ளவர் நிக்கி கல்ராணி. ஜி வி பிரகாஷ் நடிப்பில் வெளியான டார்லிங் படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து சில படங்களில் நடித்தாலும் படங்கள் வெற்றி பெறவில்லை.
என்றாலும் ரசிகர்களின் மனதில் நிக்கி கல்ராணி தனக்கென ஓர் இடத்தைப் பிடித்து வைத்திருந்தார். தற்பொழுது உடல் எடையை குறைத்து பார்ப்பதற்கே எலும்பும் தோலுமாய் பரிதாபமாய் காட்சியளிக்கும் நிக்கி கல்ராணியை, யார் என்று அடையாளம் தெரியவில்லை என ரசிகர்கள் கிண்டல் செய்து வருகின்றனர்.

nikki-galrani-weight-lose
பாலிவுட் சினிமாவில் தான் இது போன்ற ஒல்லியான தேகத்தை ரசிகர்கள் விரும்புவார்கள். ஒரு வேலை இதுவும் பாலிவுட் சமாச்சாரமாக இருக்கலாம். ஆனால் என்றுமே நம் தமிழக ரசிகர்களுக்கு கொழுகொழுவென இருக்கும் நடிகைகளை தான் பெரிதும் விரும்புவார்கள் என்பதை குஷ்புவுக்கு கோயிலை கட்டியவர்கள் தெளிவாக விளக்கியுள்ளனர்.
