Connect with us

Cinemapettai

இளசுகளை கிறங்கடித்த கோடான கோடி பாடலின் நாயகி நிகிதா தற்போது என்ன செய்து கொண்டிருக்கிறார் தெரியுமா?

nikitha

Cinema News | சினிமா செய்திகள்

இளசுகளை கிறங்கடித்த கோடான கோடி பாடலின் நாயகி நிகிதா தற்போது என்ன செய்து கொண்டிருக்கிறார் தெரியுமா?

நடிகை நிகிதா தனது கலை பயணத்தை 2007 ஆம் ஆண்டு ஹிந்தி தொலைக்காட்சி ஒளிபரப்பான தொடரின் மூலம் ஆரம்பித்தார். இவர் கடைசியாக கார்த்தி, அனுஷ்கா மற்றும் சந்தானம் ஆகியோரின் நடிப்பில் வெளியான அலெக்ஸ் பாண்டியன் படத்தில் சந்தானத்தின் மூன்று தங்கைகளில் ஒருவராக நடித்திருப்பார்.

நடிகையின் நிகிதாவின் முதல் தமிழ் திரைப்படம் 2003 ஆம் ஆண்டு வெளியான குறும்பு. சில படங்களில் கதாநாயகியாக நடித்த இவர் முன்னணி நடிகையாக வலம் வர முடியவில்லை. இதனால் கிளாமர் ரூட்டை தேர்ந்தெடுத்த இவர், கவர்ச்சியை வாரி வழங்கினார். இதனால் ஒரு பாடலுக்கு நடனமாடும் வாய்ப்புகளும் கிடைத்தது.

nikitha 1

nikitha 1

வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளிவந்த சரோஜா படத்தில் கோடான கோடி பாடலுக்கு படு கிளாமராக ஆடிய இவரை அவ்வளவு எளிதில் யாரும் மறந்திருக்க முடியாது. யுவன் சங்கர் ராஜா இசையில் வெளிவந்த கோடான கோடி என்ற பாடல் பட்டிதொட்டியெங்கும் பட்டையை கிளப்பியது.

இந்நிலையில் திடீரென காணாமல் போனவரை தேடிப்பார்த்த போது, 2017 ஆம் ஆண்டு கரண்சிங் என்பவரை திருமணம் செய்து கொண்டு இல்லற வாழ்க்கையில் மலர ஆரம்பித்து விட்டதாக தகவல் கிடைத்தது.

nikitha 2

nikitha 2

மேலும் இவருக்கு ஒரு வயதில் ஒரு குழந்தையும் உள்ளது. தற்போது குடும்பம், நண்பர்கள் என இருந்தாலும் பட வாய்ப்புகள் கிடைத்தால் நடிக்கவும் தயாராக இருக்கிறாராம்.

சீக்கிரம் கூட்டிட்டு வந்து ஒரு குத்த போடுங்கப்பா..

 

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

அதிகம் படித்தவை

To Top