Tamil Cinema News | சினிமா செய்திகள்
நீலிமா ராணிக்கு இவ்வளவு பெரிய மகளா? என்ன சொல்றீங்க
சின்னத்திரை நாயகிகளில் மக்களின் மனதில் மிக முக்கிய இடம் பிடித்தவர் நீலிமா ராணி. இவர் உலகநாயகன் கமலஹாசனின் தேவர் மகன் திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார்.
அதனைத் தொடர்ந்து பல தமிழ் படங்களிலும் குணச்சித்திர நடிகையாக வளர்ந்துள்ளார். குறிப்பாக நடிகர் கார்த்தி நடிப்பில் வெளியான நான் மகான் அல்ல திரைப்படத்தில் இவரது கதாபாத்திரம் பேசப்பட்டது.
அதைத் தொடர்ந்து பல பிரபல தொலைக்காட்சி சீரியல்களில் நாயகியாகவும் வில்லியாகவும் நடித்து தனது திறமையை நிரூபித்துள்ளார். இந்நிலையில் சில வருடங்களுக்கு முன்பு அஸ்வின் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
இவர்களுக்கு பெண் குழந்தை ஒன்று உள்ளது. திருமணத்திற்கு பிறகும் குடும்பத்தாரின் ஆதரவில் தொடர்ந்து சின்னத்திரைகளில் நடித்து வருகிறார் நீலிமா. இவருக்கு இவ்வளவு பெரிய குழந்தையா என ரசிகர்கள் வியந்து வருகின்றனர்.

neelima-daughter
