Tamil Cinema News | சினிமா செய்திகள்
தெலுங்கானா என்கவுண்டர்.. நயன்தாரா ட்ரெண்டாகும் ட்விட்டர் பதிவு
தமிழ் சினிமாவில் தற்போது நம்பர்-1 நாயகியாக வலம் வருபவர் நயன்தாரா. முன்னணி நடிகர்களுடன் ஜோடி போடுவது மட்டுமல்லாமல், பெண்களுக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளில் நடித்து அதில் வெற்றியும் பெற்றிருக்கிறார். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளிவந்த பிகில் திரைப்படம் வசூலில் சக்கை போடு போட்டது.
மேலும் விஜய் மற்றும் நயன்தாரா ஜோடி மிகவும் நன்றாக இருந்ததாக ரசிகர்கள் தெரிவித்தனர். நயன்தாரா சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் நடித்த தர்பார் திரைப்படம் பொங்கலுக்கு ரிலீஸாக உள்ளது. மேலும் தனது காதலர் விக்னேஷ் சிவன் தயாரிக்கும் நெற்றிக்கண் திரைப்படத்திலும் நடித்து வருகிறார்.
பொதுவாகவே நயன்தாரா பொது விஷயங்களில் தலையிடுவதை தவிர்த்து வருகிறார். ஆனால் தற்போது தெலுங்கானாவில் பிரியங்கா ரெட்டி என்ற மருத்துவரை கற்பழித்து கொலை செய்தவர்களை என்கவுண்டர் செய்த போலீஸ்காரர்களை வாழ்த்தியுள்ளார்.
மேலும் அவர் கூறியதாவது, சரியான நேரத்தில் வழங்கப்படும் தண்டனைக்கு நீடு இணை இல்லை எனவும், பெண்களின் பாதுகாப்பையும் முன்னேற்றத்தையும் உறுதி செய்வதாகவும் தெரிவித்துள்ளார். இதனை சமூக வலைதளங்களில் அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

statement-nayanthara
