இரண்டு வருட இடைவேளைக்கு பிறகு நடத்தப்பட இருக்கும் விஜய் அவார்ட்ஸின் ஜூரிகளில் ஒருவராக பிரபல பாலிவுட் இயக்குனர் அனுராப் கஷ்யப் இணைந்து இருக்கிறார்.

பிரபல தொலைக்காட்சி நிறுவனமான ஸ்டார் விஜய் வெள்ளித்திரை கலைஞர்களுக்கென விருதுகளை வருடாவருடம் வழங்கி வருகிறது. இது கோலிவுட் வட்டாரத்தில் பெரும் பிரபலமாக இருந்தது. எத்தனை பிரபலமாக இருந்தாலும், சர்ச்சைகளும் பெரிய அளவில் விஜய் அவார்ட்ஸில் இடம் பெற்றது. இளையராஜாவின் செவாலியர் சிவாஜி விருதை கொடுக்க காலம் தாழ்த்தியதால் அவர் விருதை வாங்காமலே நிகழ்ச்சியை விட்டு விலகியது. சிறந்த குழந்தை நட்சத்திரமாக தங்கமீன்கள் சாதனாவிற்கு விருது கொடுக்காததற்கு, அப்பட பாடல் நாமினி லிஸ்டிலே இடம்பெறாதது என மேடையிலே இயக்குனர் ராம் பேசியது என சர்ச்சைகள் ஒவ்வொரு சீசனிலும் எகிறிக்கொண்டே சென்றது. இதனால் கடந்த இரண்டு வருடமாக விஜய் அவார்ட்ஸ் நிகழ்ச்சி நடைபெறாமல் இருந்தது.

Nayanthara
Nayanthara

இதை தொடர்ந்து, 10-வது ஆண்டு விஜய் அவார்ட்ஸ் நிகழ்ச்சி வரும் மே 26-ம் தேதி கோலாகலமாக நடைபெறவிருக்கிறது. இரண்டு வருட இடைவேளைக்கு பிறகு நடக்க இருக்கும் விழா என்பதால் பிரம்மாண்டத்திற்கு பஞ்சம் இல்லாமல் நடத்த விஜய் டிவி திட்டமிட்டு இருக்கிறது. இதில் சிறந்த நடிகர், சிறந்த நடிகை, சிறந்த இயக்குனர், சிறந்த படம், சிறந்த பாடல் என மொத்தம் 5 விருதுகள் மக்களின் வாக்குகள் அடிப்படையில் கொடுக்கப்படும். மற்ற விருதுகளை 5 பிரபலங்கள் அடங்கிய ஜூரி குழு தான் தேர்வு செய்யும். நாமினி பட்டியல் முதல் வெற்றியாளர்கள் வரை அனைத்தையுமே அவர்கள் தேர்வு செய்வர் இதான் விஜய் அவார்ட்ஸில் 9 சீசன்களாக நடைபெற்று வரும் நடைமுறை.

kolamaavu

இந்நிலையில், இந்த வருடமும் 5 பேர் அடங்கிய ஜூரி குழுவை விஜய் டிவி அறிவித்து விட்டனர். எப்போதும் போல இக்குழுவில் விஜய் டிவி ஆஸ்தான பிரபலமான யூகி சேது இடம் பெற்று இருக்கிறார். திரைக்கதை தந்தையான பாக்கியராஜ், இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் உள்ளனர். விஜய் நிகழ்ச்சிகளில் ஜட்ஜாக இருந்து பிரபலமான நடிகை ராதாவும் இடம் பெற்று இருக்கிறார். இவர்கள் நால்வரும் நமக்கு நன்கு பரிட்சயமான முகம் தான். அந்த 5வது பிரபலம், பிரபல பாலிவுட் இயக்குனர் அனுராக் கஷ்யப் தான். தற்போது, கோலிவுட்டில் நயன்தாரா, அதர்வா நடிப்பில் உருவாகி வரும் இமைக்கா நொடிகள் படத்தில் வில்லனாக நடித்து வருகிறார். வெகு காலமாகவே தமிழ் சினிமாவை பாஸிடிவ்வாக அணுகி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here