Tamil Cinema News | சினிமா செய்திகள்
சினிமாவுக்கு முன் நயன்தாரா செய்த வேலை தெரியுமா?
தென்னிந்திய சினிமாவில் நம்பர்-1 நாயகி யார் என்றால் அது நயன்தாரா தான். 2005 ஆம் ஆண்டு வெளிவந்த ஐயா திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர், அதற்கு முன்பே 2003 ஆம் ஆண்டு மலையாளத்தில் அறிமுகமானார்.
அதன்பிறகு இல்லற வாழ்க்கையில் இன்பம் கொள்ளலாம் என காதல் வலையில் சிக்கி சின்னாபின்னமானார். இவரைப்போல் காதல் சர்ச்சைகளில் சிக்கிய நடிகைகள் வேறு யாருமில்லை. வேறு யாரேனும் இந்தமாதிரி சர்ச்சைகளில் சிக்கிய இருந்தால் இந்நேரம் இண்டஸ்ட்ரி விட்டே காணாமல் போயிருப்பார்கள்.
இவ்வளவு சர்ச்சைகளையும் மீறி தற்போது தமிழ் சினிமாவில் நடிகர்களுக்கு இணையாக சம்பளம் வாங்கும் அளவுக்கு வளர்ந்துள்ளார். ஆனால் இவர் சினிமாவுக்கு வருவதற்கு முன் என்ன வேலை செய்துகொண்டிருந்தார் என்று தெரியுமா?.
பிரபல மலையாள சேனலான கைராலி தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக பணியாற்றியுள்ளார். அதன் பிறகே 2003 ஆம் ஆண்டு மலையாளத்தில் பட வாய்ப்பு கிடைத்து சினிமாவிற்கு வந்தார். அவர் தொகுத்து வழங்கிய நிகழ்ச்சிகளின் வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது.
