Connect with us

Cinemapettai

விரதம் என்ற பெயரில் சிக்கன் சாப்பிட்டு அம்மனை ஏமாற்றிய நயன்தாரா.. தெய்வ குற்றத்திற்கு ஆளான படக்குழு

nayanthara-rj balaji

Tamil Cinema News | சினிமா செய்திகள்

விரதம் என்ற பெயரில் சிக்கன் சாப்பிட்டு அம்மனை ஏமாற்றிய நயன்தாரா.. தெய்வ குற்றத்திற்கு ஆளான படக்குழு

தமிழ் சினிமாவில் நகைச்சுவை நாயகர்கள் ஹீரோவாக அறிமுகமாகி ஹிட் கொடுத்து வருகின்றனர். அந்த வகையில் சந்தானத்தை தொடர்ந்து அந்த லிஸ்டில் இணைந்தவர் ஆர்.ஜே. பாலாஜி.

வெண்ணிற ஆடை மூர்த்திக்கு அடுத்து டபுள் மீனிங் காமெடியில் தாறுமாறாக வெளுத்து வாங்கியவர் ஆர்.ஜே. பாலாஜி. அதன்பிறகு படபடவென சினிமாவில் வளர ஆரம்பித்து விட்டார். இந்நிலையில் அவரது நடிப்பில் வெளியான எல்கேஜி திரைப்படம் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது. தற்போதைய அரசியலை நகைச்சுவையுடன் சேர்த்து கொடுத்ததால் மக்கள் பெரிதும் வரவேற்றனர்.

அதனைத் தொடர்ந்து மீண்டும் ஹீரோவாக மூக்குத்தி அம்மன் என்ற திரைப்படத்தில் நடிக்க உள்ளார். இதில் நயன்தாரா அவருக்கு ஜோடியாக நடிக்க, படம் முழுக்க பக்தியை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது. இதனால் படக்குழு முழுவதும் சைவத்துக்கு மாறி விட்டதாக கூறியுள்ளார் ஆர்.ஜே. பாலாஜி, அதே சமயத்தில் நயன்தாரா விரதம் இருப்பதாகவும் தெரிவித்திருந்தார்.

ஆனால் சமீபத்தில் நயன்தாராவின் காதலராக அறியப்படும் விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் முழு கோழியை வெட்டும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதனால் தெய்வ குத்தம் ஆகி விட்டதாக கலங்கி கொண்டிருக்கும் படக்குழு, அதற்கான பரிகார பூஜையில் ஈடுபட்டு இருப்பதாகவும் தெரியவருகிறது.

கண்ணுகளா சினிமா என்ற பெயரில் சாமியையே கிண்டல் பண்ற வேலை வெச்சுக்காதீங்க

vikki-official

vikki-official

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top