புதன்கிழமை, டிசம்பர் 11, 2024

மீண்டும் தனுஷை சீண்டிய நயன்தாரா.. அட! மறுபடியும் 3 பக்கத்துக்கு அறிக்கை விட்ருக்காங்கப்பா

Nayanthara: எந்த அளவுக்கு பிரச்சனை அதிகமா இருக்குதோ அந்த அளவுக்கு கல்லா கட்டலாம் என நயன்தாரா முடிவெடுத்து விட்டார் போல. ஏற்கனவே நயன்தாரா டாக்குமென்டரி படம் ரிலீஸ் ஆக இருக்கும் முந்தைய நாளில் தனுஷை வம்புக்கு இழுத்து நான்கு பக்கம் அறிக்கை விட்டு சமூக வலைத்தளத்தில் கொளுத்தி போட்டார்.

போதாத குறைக்கு டாக்குமென்டரி படம் ரிலீஸ் ஆகி இரண்டு நாட்கள் கழித்து மீண்டும் மூன்று பக்கத்திற்கு ஒரு அறிக்கை வெளியாகி இருக்கிறது. தன்னுடைய அனுமதி இல்லாமல் நானும் ரவுடிதான் சம்பந்தப்பட்ட மூன்று செகண்ட் வீடியோவை பயன்படுத்தியதால் ஒரு தயாரிப்பாளராக நயன்தாராவுக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பி இருந்தார் தனுஷ்.

அதில் 24 மணி நேரத்திற்குள் அந்த வீடியோவை நீக்காவிடில் 10 கோடி அபராதம் கொடுக்க வேண்டும் என சொல்லியிருந்தார். இந்த நிலையில் அந்த வீடியோவை நீக்காமலேயே டாக்குமென்ட்ரி படமும் ரிலீஸ் ஆகிவிட்டது. சமூக வலைத்தளத்திலும் நெகட்டிவ் பாசிட்டிவ் என மொத்தத்தையும் பேசி தீர்த்து விட்டார்கள்.

மீண்டும் தனுஷை சீண்டிய நயன்தாரா

நானும் ரவுடிதான் சம்பந்தப்பட்ட வீடியோவுக்காக தனுஷின் NOC கேட்கப்படவில்லை என அவருடைய அப்பா கஸ்தூரிராஜா திட்டவட்டமாக மறுத்திருக்கிறார். மேலும் தன்னுடைய மகனுக்கு நிறைய வேலைகள் இருப்பதாகவும் இது போன்ற விஷயத்தில் எல்லாம் அவரால் கவனம் செலுத்த முடியாது எனவும் சொல்லி இருக்கிறார்.

இந்த நிலையில் இன்று நயன்தாரா தன்னுடைய அறிக்கையில் கோலிவுட், டோலிவுட், பாலிவுட் என எல்லா மொழியை சேர்ந்த தயாரிப்பாளர்கள் சிலர் அது பெயரை குறிப்பிட்டு தன்னுடைய டாக்குமென்டரி வீடியோவில் அவர்கள் தயாரித்த படத்தின் காட்சிகளை உபயோகப்படுத்த அனுமதி கொடுத்த தயாரிப்பாளர்களுக்கு நன்றி என லிஸ்ட் போட்டு இருக்கிறார். இதில் தனுஷின் பெயர் இடம்பெறவில்லை. இந்த அறிக்கையின் மூலம் மீண்டும் தனுஷை சீண்டிப் பார்த்திருக்கிறார் நயன்தாரா.

Nayanthara
Nayanthara
Nayanthara
Nayanthara
Nayanthara
Nayanthara
- Advertisement -

Trending News