fbpx
Connect with us
Cinemapettai

Cinemapettai

கையில் சுத்தியலுடன் வெளிவந்த ராக்கி வீடியோ.. நயன்தாராவை வைத்து காசு பார்க்கும் விக்னேஷ் சிவன்

nayanthara-rocky

Videos | வீடியோக்கள்

கையில் சுத்தியலுடன் வெளிவந்த ராக்கி வீடியோ.. நயன்தாராவை வைத்து காசு பார்க்கும் விக்னேஷ் சிவன்

தமிழ், தெலுங்கு, மலையாளம் என்று தென்னிந்திய திரைப்படங்களில் முன்னணி நடிகையாக இருப்பவர் நடிகை நயன்தாரா. இவர் தற்போது விஜய் சேதுபதியுடன் இணைந்து காத்துவாக்குல 2 காதல் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

நயன்தாரா தன் காதலன் விக்னேஷ் சிவனுடன் இணைந்து ரவுடி பிக்சர்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வருகிறார். இந்த நிறுவனம் பல தரமான திரைப்படங்களை வெளியிட்டு வருகிறது. அந்த வரிசையில் தரமணி படத்தின் மூலம் பிரபலமான வசந்த் ரவி நடித்து வரும் திரைப்படம் ராக்கி.

இந்த திரைப்படத்தை இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கியுள்ளார். மேலும் இந்த படத்தில் இயக்குனர் பாரதிராஜா மற்றும் ரோகிணி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஆக்ஷன் கலந்த த்ரில்லர் படமான இந்த படத்தின் வெளியீட்டு உரிமையை நயன்தாராவின் ரவுடி பிக்சர்ஸ் நிறுவனம் பெற்றுள்ளது.

மேலும் இந்த படத்திற்கு பிரமோஷன் தரும் விதமாக நயன்தாரா பங்கு பெறும் ஒரு ஸ்பெஷல் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. கிட்டத்தட்ட ஒன்றரை நிமிடங்கள் ஓடும் இந்த வீடியோ மிகவும் மிரட்டலாக உள்ளது.

அதில் நயன்தாரா ரத்தக் களரியாக கையில் சுத்தியல் உடன் இருக்கிறார். அப்போது காலம் ஒரு துரோகி, படுபாவி என்று நீளமான வசனத்தையும் பேசுகிறார். இந்த நயன்தாராவின் உருக்கமான வீடியோ, அவர் பேசும் வசனம் அனைத்தும் படத்தின் மீதான எதிர்பார்ப்பையும், சுவாரஸ்யத்தையும் அதிகரித்துள்ளது.

வரும் டிசம்பர் 23 அன்று வெளியாக இருக்கும் இந்த படத்திற்கு தர்புகா சிவா இசையமைத்துள்ளார் மற்றும் ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்துள்ளார். விளம்பரத்திற்காக நயன்தாராவை வைத்து காசு பார்க்கும்  விக்னேஷ்  சிவனின் இந்த ப்ரோமோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading

More in Videos | வீடியோக்கள்

அதிகம் படித்தவை

To Top