Connect with us

Cinemapettai

actress-namitha

Cinema News | சினிமா செய்திகள்

மீண்டும் தமிழ் சினிமாவை தாக்க வரும் கவர்ச்சி புயல்.. அடடே! ஆளே மாறிட்டாங்க

தமிழ் சினிமாவில் கவர்ச்சியுடன் நடிக்கவும் தெரிந்த கதாநாயகிகள் கிடைப்பது மிகவும் அரிது. அப்படி கிடைத்த பொக்கிஷம் தான் நமீதா. இவர் 2002 ஆம் ஆண்டு வெளிவந்த சொந்தம் என்ற தெலுங்கு படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார்.

அதன்பிறகு புரட்சி கலைஞர் விஜயகாந்த் நடிப்பில் வெளியான எங்கள் அண்ணா படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்குள் காலடி எடுத்து வைத்தார். கப் என்று கவ்வி கொண்ட தமிழ் சினிமா தொடர்ச்சியாக ஐந்தாறு வருடங்களுக்கு அவரை விடவே இல்லை. தொடர்ந்து பல படங்களில் புக் செய்யப்பட்டார்.

இதில் நடிகர் சரத்குமார் படம் என்றால் அதில் ஹீரோயின் நமீதா தான். ஒரு கட்டத்தில் உடம்பு ஏறி சினிமாவில் இருந்து ஒதுக்கப்பட்டார். அதன்பிறகு சின்னத்திரையில் வந்த நடன நிகழ்ச்சிகளில் ஜார்ஜ் ஆகவும் செயல்பட்டார். குஷ்புவை போல இவருக்கும் கோயம்புத்தூர் பக்கத்தில் கோவில் கட்டி வழிபட்டனர் இவரது ரசிகர்கள்.

பிறகு திருமணம் செய்து கொண்டு சினிமாவை விட்டு ஒதுங்கி இருந்த நமீதா தற்போது உடல் எடையை குறைத்து மீண்டும் சினிமாவில் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார். அவருடைய ஸ்லிம்மான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகின்றன.

புகைப்படங்கள் :

namitha

namitha

namitha-latest

namitha-latest

namitha-latest-01

namitha-latest-01

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top