Sports | விளையாட்டு
90களில் இந்தியாவை கலக்கிய கங்குலி,நக்மா காதல் பிரிய காரணம் தெரியுமா? வெளிவந்த 20 வருட ரகசியம்
1990களில் தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாக்களில் ஆளுமை நிகழ்த்தியவர் நடிகை நக்மா. அன்றைய இளைஞர்களின் கனவுக் கன்னியாக வலம் வந்தவர். கவர்ச்சியிலும் நடிப்பிலும் சினிமா உலகத்தை ஒரு கலக்கு கலக்கியவர்.
இவரும் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கங்குலியும் காதலித்த விஷயம் அனைவருக்கும் தெரியும். அதாவது கங்குலி திருமணமான பிறகு நடிகை நக்மாவின் மீது காதல் கொண்டார். இருவரும் ஒன்றாக சுற்றி வந்ததன்மூலம் இந்த காதல் கதை தெரியவந்தது.
அதன் பிறகு திடீரென இருவரும் பிரிந்து விட்டனர். அவர்கள் பிரிந்ததன் ரகசியம் இன்றுவரை காக்கப்பட்ட நிலையில் தற்போது அது வெளியே வந்துள்ளது. ஆம். நக்மா, கங்குலி இருவரும் காதலித்துக் கொண்டிருக்கும் வேளையில் கங்குலியின் பர்பாமன்ஸ் இந்திய கிரிக்கெட் அணிக்கு போதுமானதாக இல்லை. மேலும் தொடர்ந்து சொதப்பி வந்தார்.
இதனால் நக்மா வந்ததன் காரணமாகத்தான் கங்குலியால் கிரிக்கெட் சரியாக விளையாட முடியவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது. இதன் காரணமாகவே இருவரின் தனிப்பட்ட வாழ்க்கையும் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக இருவரும் மன ஒற்றுமையுடன் பிரிந்ததாக சமீபத்திய பேட்டியில் தெரிவித்துள்ளார்.
ஆனால் தற்போதும் அவர் மீது பெரிய மரியாதை இருப்பதாக நக்மா கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தாதா அப்பவே அப்படி.!
