Tamil Cinema Gossips | சினிமா கிசுகிசு | Tamil Cinema KisuKisu
நடிகையிடம் பட வாய்ப்பு தருகிறேன் என ரொமான்டிக்காக பேசிய இளம் இயக்குனர்.. பிளாக் மெயில் செய்யும் நடிகை
பிரபல நடிகை ஒருவருடன் இயக்குனர் பட வாய்ப்பு தருவதாக அத்துமீறி பேசிய ஆடியோவை காப்பி பண்ணி வைத்துக் கொண்டு அவரிடம் பணம் பறித்துள்ளார் பிரபல நடிகை.
சமீபகாலமாக சர்ச்சை நடிகை என பெயர் எடுக்கப்பட்டவர் தான் அந்த மாடல். இந்த நடிகையை கேவலமாக திட்ட ரசிகர்களே கிடையாது.
இருந்தாலும் என்ன தைரியத்தில் தான் ஒரு பெரிய நடிகை என்பதை போல வீடியோ போடுகிறாறோ தெரியவில்லை. அதுமட்டுமில்லாமல் அடிக்கடி ஆண் நன்பர்களுடன் ஊர் சுற்றும் புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார்.
ஆரம்பத்தில் சினிமாவில் நடிக்கும்போது அமைதியாக இருந்த இந்த நடிகை தற்போது பட வாய்ப்புகள் குறைந்த நேரத்தில் முன்னணி நடிகர்கள், நடிகைகள் என அனைவரையும் தரக்குறைவாக பேசி வருகிறார்.
நாயகியின் சுயரூபம் தெரியாமல் ஆரம்ப காலகட்டங்களில் ஒரு இளம் இயக்குனர் அவரிடம் பட வாய்ப்பு தருவதாக சொல்லி ரொமான்டிக்காக பேசியுள்ளார். அதை அந்த நாயகி அப்படியே ரெக்கார்ட் பண்ணி வைத்துக் கொண்டாராம்.
தற்போது அந்த ஆடியோவை வெளியிட்டு விடுவேன் என அந்த இயக்குனரை மிரட்டி கிட்டத்தட்ட 15 முதல் 20 லட்சம் வரை பணத்தை சுருட்டி விட்டாராம்.
காத்திருந்தவன் பொண்டாட்டியை நேத்து வந்தவன் கூட்டிட்டு போனது போல கஷ்டப்பட்டு சம்பாதித்ததை ஒரே போன் காலில் லவட்டிக் கொண்டு சென்று விட்டார் அந்த நாயகி.
