Tamil Cinema News | சினிமா செய்திகள்
பறிபோகும் பட வாய்ப்புகளால் பரிதாபம்.. பலான படங்களை வெளிவிடும் மீரா மிதுன்..
பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரபலங்கள் அனைவரும் ஏதாவது ஒரு வகையில் சினிமாவில் இருந்து கொண்டு தான் இருப்பார்கள். ஆனால் பிக்பாஸ் சீசன்-3 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மீரா மிதுன்க்கு அது அப்படியே உல்டா ஆகிவிட்டது.
பிக்பாஸ் வீட்டிற்கு செல்வதற்கு முன்னால் இவர் நடித்து விட்டு சென்ற காட்சிகளை நம்ம வீட்டுப் பிள்ளை படத்தில் இருந்து தூக்கி விட்டனர். இந்த பட விவகாரத்தில் நடிகர் சிவகார்த்திகேயனை நேரடியாக வம்புக்கு இழுத்தது நினைவிருக்கலாம்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் இவரது நடவடிக்கை யாருக்கும் பிடிக்கவில்லை என்பது ஒரு முக்கிய காரணமாகும். அதேபோல் அடுத்தடுத்து கைவசம் வைத்திருந்த அனைத்து படவாய்ப்புகளும் தொடர்ந்து பறிபோகின்றது.
இதனால் செய்வதறியாது விழித்துக்கொண்டிருக்கும் மீரா மிதுன், தற்போது கவர்ச்சியின் உச்சத்திற்கு சென்று புகைப்படங்களை எடுத்து, அதனை பல தயாரிப்பாளர்களுக்கும் இயக்குனர்களுக்கும் அனுப்பி பட வாய்ப்புகளை தேடிக் கொண்டிருக்கிறார்.
சமீபத்தில் தண்ணி அடிப்பது போன்றும், புகை பிடிப்பது போன்றும் இவருடைய புகைப்படங்கள் வெளியாகி மக்களிடையே இவர் மீது வெறுப்புகளை உண்டாக்கியுள்ளது. மேலும் தொடர்ந்து இதுபோன்ற அளவில்லா ஆபாசங்களை காட்டி வருவதனால் கூடிய விரைவில் செமத்தியாக வாங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
