fbpx
Connect with us
Cinemapettai

Cinemapettai

இரண்டாவது திருமணத்திற்கு ரெடியான மீரா மிதுன்.. யாருப்பா அந்த தியாகி?

mithun-meera

Tamil Cinema News | சினிமா செய்திகள்

இரண்டாவது திருமணத்திற்கு ரெடியான மீரா மிதுன்.. யாருப்பா அந்த தியாகி?

சமீபத்தில் நடந்த பிக்பாஸ் சீசன்-3 நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர் நடிகையும், மாடல் அழகியுமான மீரா மிதுன். கடந்த 2011-ம் ஆண்டு நடைபெற்ற மிஸ் இந்தியா அழகிப் போட்டியில் பட்டம் வென்றவர். பிறகு பல மோசடி செயல்களில் ஈடுபட்டிருந்த இவரது பட்டம் பறிக்கப்பட்டது. பின் போட்டியில் இரண்டாவது இடம் பிடித்தவரும், தர்சனின் காதலியுமான சனம் ஷெட்டிக்கு அந்த பட்டம் சென்றடைந்தது.

இந்நிலையில் மீரா மிதுனுக்கு நடைபெற்ற முதல் திருமணம் பற்றி அனைவரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை. இதனை பற்றி முதன் முறையாக பிக்பாஸ் நிகழ்ச்சியில் மனம் திறந்து பேசினார்.
மீரா மிதுன் பல்வேறு பண மோசடி வேலைகளில் ஈடுபட்டுள்ளார். இதனால் எந்நேரமும் கைது செய்யப்படலாம் என்று எண்ணிக் கொண்டிருந்த நேரத்தில் பிக் பாஸ் வீட்டினுள் நுழைந்தார் மீரா மிதுன்.

இவரது சமீபத்திய நடவடிக்கைகளைப் பார்த்து நம்ம வீட்டுப் பிள்ளை திரைப்படத்தில் இவர் நடித்திருந்தார் காட்சிகள் நீக்கம் செய்யப்பட்டு இருந்தது. அதேபோலஅருண் விஜய் நடிக்கும் அக்னி சிறகுகள் படத்திலிருந்து நீக்கப்பட்டார்.

இதனால் மன உளைச்சலுக்கு ஆளான மீரா மிதுன் தற்போது தனது நீண்டகால நண்பரை இரண்டாவது திருமணம் செய்ய முன்வந்துள்ளார். தற்போது இணையதளங்களில் மீரா மிதுன் புகைப்பிடிக்கும் படங்களையும், தண்ணி அடிக்கும் புகைப்படங்களையும் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார்.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top