fbpx
Connect with us

Cinemapettai

திடீரென பிரபல நடிகையை தே**** என அழைக்கும் ரசிகர்கள்.. எஸ் ஜே சூர்யா பட நாயகிக்கு நேர்ந்த சோகம்

Tamil Cinema News | சினிமா செய்திகள்

திடீரென பிரபல நடிகையை தே**** என அழைக்கும் ரசிகர்கள்.. எஸ் ஜே சூர்யா பட நாயகிக்கு நேர்ந்த சோகம்

எஸ் ஜே சூர்யா உடன் அன்பே ஆருயிரே படத்தில் ஜோடியாக நடித்தவர் நிலா. அதனைத் தொடர்ந்து லீ, மருதமலை, ஜாம்பவான் போன்ற படங்களில் நடித்து பிரபலமானார். பிரபல இந்தி நடிகை பிரியங்கா சோப்ராவின் சகோதரி என்பதும் குறிப்பிடத்தக்கது.

தனக்கு தானே ஆப்பு வைத்துக் கொள்வது என்பதைக் கேள்விப்பட்டு இருக்கிறோம், ஆனால் அது இவர் விஷயத்தில் தான் உண்மையாகியுள்ளது. தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கிலும் சில படங்களில் நடித்துள்ளார் நிலா. இவரது முழுப்பெயர் மீரா சோப்ரா.

தெலுங்கில் பிரபல நடிகர்களாக வலம் வரும் மகேஷ் பாபு மற்றும் ஜூனியர் என்டிஆர் ஆகியோர்களை பற்றி ரசிகர்கள் அவரிடம் ட்விட்டரில் கேள்வி எழுப்பியுள்ளனர். மகேஷ்பாபு எனக்கு பிடிக்கும் எனவும், ஜூனியர் என்டிஆர் யார் என்றே தெரியாது எனவும் தெரிவித்துள்ளார்.

இதனால் டென்ஷனான ஜூனியர் என்டிஆர் ரசிகர்கள் தொடர்ந்து அவருக்கு வேசி பட்டம் கட்டி வருகின்றனர். இதனால் சமூக வலைதளங்களில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து நிலாவின் அந்தரங்க புகைப்படங்களை பதிவிட்டு வருகின்றனர் ரசிகர்கள்.

இதனால் நேரடியாக ஜூனியர் என்டிஆர் இடம் உங்களது ரசிகர்கள் உங்களை பிடிக்கவில்லை என்று சொல்வதற்கு இப்படிப் பேசுகிறார்களே, இதையெல்லாம் கேட்க மாட்டீங்களா என நேரடியாக ட்விட்டரில் கோரிக்கை வைத்துள்ளார்.

அதுமட்டுமில்லாமல் நீங்களும் ஒருவருக்கு ரசிகராக தானே இருப்பீர்கள் எனவும் சோகமாக தெரிவித்துள்ளார். இருந்தும் ரசிகர்கள் அவரை கண்டபடி பேசி வருகின்றனர்.

Continue Reading
To Top