Connect with us

Cinemapettai

rajini-meena

Tamil Cinema News | சினிமா செய்திகள்

பல வருடங்களுக்கு பிறகு ரஜினியுடன் இணையும் மீனா!

பல வருடங்களுக்கு பிறகு ரஜினியுடன் மீனா இணைந்து நடிக்க உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. ரஜினிகாந்தின் அன்புள்ள ரஜினிகாந்த் திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர் மீனா. இந்த படம் 1984ம் ஆண்டு வெளியானது.

அதன்பிறகு மீனா ரஜினிக்கு எஜமான் படத்தில் ஜோடியாக நடித்தார். அதைத்தொடர்ந்து வீரா, முத்து ஆகிய படங்களில் ஜோடியாக நடித்தார். இதில் முத்து திரைப்படம் உலகப்புகழ் பெற்றது. ஜப்பானில் கூட பெரும் வெற்றி பெற்றது.

இந்நிலையில் மீனா திருமணம்ஆகி சினிமாவில் இருந்து முற்றிலும் சில காலம் விலகினார். இந்நிலையில் சில வருடங்களுக்கு பிறகு நடிக்க வந்துள்ளார். குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பேட்ட படத்தை தொடர்ந்து முருகதாஸ் இயக்கத்தில் தர்பார் படத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ளார். இந்த படத்தின் ஷுட்டிங் முடிந்துவிட்ட நிலையில் சிறுத்தை சிவா இயக்கும் புதிய படத்தில் நடிகர் ரஜினி நடிக்க உள்ளார்.

இந்த படத்தில் தான் நடிக்க மீனா ஒப்பந்தம் ஆகியுள்ளார். ஆனால் என்ன ரோலில் நடிக்க போகிறார் என்பது தெரியவில்லை.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

இத கண்டிப்பா படிங்க

To Top