இயக்குனர்களை மயக்கி திருமணம் செய்த 7 நடிகைகள்.. இதில் உங்களுக்கு பிடித்த ஜோடி யாரு.?

இந்திய சினிமாவில் எத்தையோ நாயகிகள் இயக்குனர்களை விரும்பி கரம் பிடித்ததுண்டு. அப்படியான ஒன்றுக்கு தென்னிந்திய திரைகளும் விதிவிலக்கல்ல.

சரண்யா பொன்வண்ணன்: பல படங்களில் நடிகராக அறியப்பட்டவர் நடிகர் பொன்வண்ணன் இவர் ஒரு துணை இயக்குனர் என்பது பலரும் அறிந்திடாத ஒன்று. இப்போது அம்மா கேரக்கடரில் அசத்தி வரும் சரண்யா நடிகரும் இயக்குனருமான பொன்வண்ணனை திருமணம் செய்து கொண்டார். இப்போது இவர்களுக்கு இரு மகள்கள் உள்ளனர்.

பூர்ணிமா பாக்யராஜ்: 90களில் சில படங்களில் நடித்தவர் நடிகை பூர்ணிமா பாக்கியராஜ். அதே போல் 90களில் தவிர்க்க முடியாத இயக்குனராக வலம் வந்தவர் இயக்குனர் பாக்யராஜ். இருவரும் இணைந்த படம் “டார்லிங்” அடுத்ததாய் திருமணம் செய்த இந்த தம்பதிக்கு நடிகர் சாந்தனு என்கிற மகனும் ஒரு மகளும் உள்ளனர்.

ரம்யா கிருஷ்ணன்: தென்னிந்திய சினிமாவில் தடம் பதித்து தமிழ் தெலுங்கு மலையாளம் என அனைத்திலும் அசத்தி வந்தவர் நடிகை ரம்யா கிருஷ்ணன். பாகுபலி படத்தின் வாயிலாக இந்தியாவே அறிந்த நாயகியானார். இவருடன் இணைந்த இயக்குனர் கிருஷ்ணா வம்சியுடன் இணைந்த “சந்திரலேகா” படத்தின் நட்பு காதலாக மாறியது. மணம் முடித்த தம்பதிக்கு ஒரு மகனும் உள்ளார்.

ramyakrishnan-krishnavamsi-cinemapettai
ramyakrishnan-krishnavamsi-cinemapettai

ரோஜா செல்வமணி: 90களில் தவிர்க்க முடியா நாயகியாக வலம் வந்தவர் நடிகை ரோஜா. இப்போது அரசியல் பொறுப்புகள் என படுபிசியாகிவிட்டார். தமிழ் சினிமாவின் ஆரம்பத்தில் “செம்பருத்தி” படத்தில் அறிமுகமானவருக்கு அங்கிருந்தே இயக்குனர் செல்வமணியின் துணைதான். இருவரும் மணம் முடித்த நிலையில் ஒருமகளும் ஒரு மகனும் உள்ளனர்.

பிரீத்தா ஹரி: இயக்குனர் ஹரி பல்வேறு மாஸ் ஆக்சன் படங்களின் வாயிலாக தமிழ் சினிமாவில் பெரிதும் அறியப்பட்டவர். நடிகர் விஜயக்குமார் மஞ்சுளா தம்பதியின் மகளும் அருண்விஜயின் சகோதரியமான ப்ரீத்தாவை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகான வெற்றிகளால் தான் தமிழ் திரையில் மின்னத்துவங்கினார் இயக்குனர் ஹரி. திருமணம் முடித்த இத்தம்பதிக்கு 3 மகன்கள் உள்ளனர்.

தேவயாணி : 90 களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது தேவையாணி ராஜ்குமார் திருமணம் தான். பெருமளவு ரசிகர்களால் குடும்ப நடிகையாக அறியப்பட்டவர் தேவையாணி. இயக்குனர் ராஜ்குமாரும் பல்வேறு நல்ல படங்களை கொடுத்திருந்தார். இயக்குனர் ராஜ்குமாருடன் இணைந்த தேவையாணிக்கு இரு மகள்கள் உள்ளனர்.

குஷ்பு சுந்தர்: 90களில் தமிழ் திரைக்கு சிகப்பு கம்பளம் விரித்து வரவேற்றது தமிழ் திரை. சுந்தர் சியும் அப்போதிலிருந்தே அறியப்பட்ட ஒரு இயக்குனர். இருவரும் இணைந்தது முறைமாமன் படத்தில் தான் அதற்கு பிறகான காதலில் விழுந்தவர் தான் குஷ்பு. இருவரும் இணைந்த திருமணத்தின் வாயிலாய் இரு மகள்கள் உள்ளனர். புகழின் உச்சத்தில் இருந்த நிலையிலேயே திருமணம் முடித்த இந்த பந்தங்கள் இன்று வரை இணைந்து வாழ்வதால் பேசுபொருளாகியுள்ளன…