என்னவென்று சொல்வதம்மா வஞ்சியவள் பேரழகை என பத்து வருடத்திற்கு முன்னர் இளைஞர்களை பித்து பிடித்து அலைய வைத்தவர்தான் அந்த நடிகை. இவருக்கு உயரமான நடிகை என்ற பட்டப் பெயரும் உள்ளது.
தன்னுடைய உயரத்தை காரணம் காட்டி கவர்ச்சிப் படங்களில் நடிக்க மாட்டேன் என்று ஒருபோதும் இந்த நடிகை சொன்னதே கிடையாது. சும்மா தளதளன்னு இந்த நடிகை கிளாமரில் வந்தால் தியேட்டரே அதிர்ந்து விடும்.
அந்த அளவுக்கு தன்னுடைய வசீகரத்தால் அனைவரையும் கட்டிப் போட்டு வைத்திருந்த அந்த நடிகை ஒரு கட்டத்திற்கு பிறகு கதையின் நாயகியாக வரும் படங்களில் நடிக்கத் தொடங்கினார்.
ஒரு பக்கம் நடிகர்களுடன் ரொமான்ஸ், இன்னொரு பக்கம் சோலோ ஹீரோ என் படங்கள் என கலக்கிக் கொண்டிருந்த அந்த நடிகை ஒரே ஒரு படத்திற்காக உடல் எடையை கூட்டினார். அதோடு புடிச்சது ஏழரை சனி.
இப்போ வரை விட்டபாடில்லை. அதேபோல் உடம்பும் குறைந்தபாடில்லை. இதனால் அந்த நடிகையின் சினிமா கனவு கனவாகவே போய்விட்டது. முன்னொரு காலத்தில் அந்த நடிகையின் வீடே கதியெனக் கிடந்த நடிகர்களும் தயாரிப்பாளர்களும் தற்போது அந்த நடிகையின் வீட்டுப் பக்கம்கூட செய்வதில்லையாம்.
இதனால் மனம் நொந்து போன அந்த நடிகையை கல்யாணமாவது செய்து கொள்ளலாம் மாப்பிள்ளை பாருங்கள் என வீட்டாரிடம் கூறினாராம். அவர்களும் பெரிய வலையாக வீசி பார்த்திருக்கிறார்கள். ஆனால் கண்ணுக்கு எட்டியவரை எந்த தொழிலதிபர் மாப்பிள்ளையும் சிக்கவில்லை.
ஏன் இன்னும் மாப்பிள்ளை கிடைக்க வில்லை என்று நடிகை கேட்டதற்கு, ஏழு கழுதை வயசாச்சு இப்ப போய் மாப்பிள்ளை தேடினால் எப்படி கிடைக்கும்? என நடிகையின் வீட்டாரே அவரை கிண்டல் செய்யும் நிலைமைக்கு தள்ளப்பட்டு விட்டாராம், பாவம்.