Connect with us
Cinemapettai

Cinemapettai

simbu-cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

சினிமாவை விட்டு விலகிய சிம்பு பட நடிகை.. காரணத்தைக் கேட்டு உறைந்து போன ரசிகர்கள்

குஷ்பு, ஜோதிகா இவர்கள் வரிசையில் கொஞ்சம் பூசினாற் போல் உடல் அமைப்பைக் கொண்ட நடிகைதான் மஞ்சிமா மோகன். இவர் தமிழ் சினிமாவிற்கு சிம்புவுடன் ஜோடி சேர்ந்து ‘அச்சம் என்பது மடமையடா’ என்ற படத்தின் மூலம் நடித்து அறிமுகமானார். அதன்பிறகு தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளிலும் நடித்துள்ளார்.

அதன் பின் சில காலம் சினிமாவை விட்டு விலகி இருந்த மஞ்சிமா மோகன், அதற்கு என்ன காரணம் என்பதை தற்போது பேட்டி ஒன்றின் மூலம் தெரிவித்துள்ளார். கடந்த 2019 ஆம் ஆண்டு மஞ்சிமா மோகனுக்கு காலில் ஒரு அறுவை சிகிச்சை நடந்துள்ளது. அதன் பிறகு கடுமையான முதுகு வலி மற்றும் அதற்கான ட்ரீட்மெண்ட் எடுத்துக்கொண்டிருந்த மஞ்சிமா மோகன் கொஞ்சம் வெயிட் போட்டு உள்ளார்.

அதற்காக தொடர்ந்து யோகா, பிசியோதெரபி போன்ற முயற்சிகளை மேற்கொண்டாலும் உடல் பருமன் ஏற்பட்டு விட்டதாம். அந்த நிலையில் மஞ்சிமா மோகன் நடித்த படத்திற்கான புரமோஷனுக்கு சென்றபோது அனைவரும் கேட்ட ஒரே கேள்வி, ஏன் இவ்வளவு குண்டா ஆயிட்டீங்க? என்றுதான்.

அவர்களுடைய கேள்வி மஞ்சுமா மோகனுக்கு மிகுந்த மன உணர்ச்சிகளை ஏற்படுத்திவிட்டது. அதுமட்டுமில்லாமல் சமூக வலைதளங்களில் மஞ்சிமா மோகனின் உடல் பருமனை குறித்து கிண்டல் அடிப்பதை தொடர்ச்சியாக செய்து வந்தனர்.

manjima mohan

manjima mohan

‘நடிகைகளும் மனிதர்கள்தானே, சாதாரண மனிதர்களுக்கு வரக்கூடிய எல்லா பிரச்சினையும் அவர்களுக்கும் வரும் என்பதையும் ஏன் புரிந்து ஓய்வதில்லை?’ என்று உருக்கமாக மஞ்சிமா மோகன் தனது பேட்டியில் தெரிவித்துள்ளார்.

அதன்பிறகு  சரியான நபரை சந்தித்து, தனது உடல் எடையை குறைத்த மஞ்சிமா மோகன் நீண்ட இடைவெளிக்குப் பிறகு, ‘துக்ளக் தர்பார்’, ‘எஃப் ஐ ஆர்’ போன்ற படங்களில் நடித்திருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.

Continue Reading
To Top