சிம்புவுடன் அச்சம் என்பது மடமையடா படத்தில் அறிமுகமான மஞ்சிமா மோகன், விக்ரம் பிரபுவுடன் சத்ரியன் படத்தில் நடித்திருப்பவர், அடுத்தபடியாக உதயநிதியுடன் இப்படை வெல்லும் படத்தில் நடிக்கிறார்.

இதையடுத்து மலையாளத்தில் இருந்து சில பட வாய்ப்புகள் வந்தபோது, தமிழில் வளரத் தொடங்கியிருக்கும் நேரத்தில் கவனத்தை வேறு பக்கம் திருப்பினால் இங்குள்ளவர்கள் மறந்து விடுவார்கள் என்று சொல்லிக்கொண்டு தொடர்ந்து தமிழில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறார்.

அதிகம் படித்தவை:  மணிரத்னம் படத்தில் இணைந்த பிரபல இளம் காமெடி நடிகர்

மேலும், அடுத்தபடியாக முன்னணி நடிகர்களுடன் நடிப்பதற்கான முயற்சிகளிலும் ஈடுபட்டுள்ள மஞ்சிமா மோகன், அவ்வப்போது ரசிகர்களுடன் டுவிட்டரில் உரையாடுவதையும் தொடர்ந்து வருகிறார்.

அதிகம் படித்தவை:  அஜித்தின் காதல் மன்னன் படத்தில் நடித்த மானுவா இது.! அழகான புகைப்படம்.!

 

சமீபத்தில் அவர் உரையாடியபோது ஒரு ரசிகர், அஜித், விஜய் இருவரில் யார் பிடிக்கும் என்று கேட்டதற்கு இரண்டு பேருமே பிடிக்கும் என்று பொதுவான பதிலை கொடுத்துள்ளார். என்றாலும், அஜித்தின் அர்ப்பணிப்பு எனக்கு ரொம்ப பிடிக்கும் என்று பதில் கொடுத்துள்ளார் மஞ்சிமாமோகன்.