“ஹீரோயின்களை ஆடை இல்லாமல் பார்க்க யாரும் வருவதில்லை” : பிரபல ஹீரோயின் காட்டம்!

நடிகர் சிம்பு உடன் அச்சம் என்பது மடமையடா படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை மஞ்சிமா மோகன். அதன் பின்னர் சத்ரியன், இப்படை வெல்லும் போன்ற படங்களில் நடித்து வருகிறார். இவர் தனது டுவிட்டர் பக்கத்தில் நடிகைகளைப்பற்றிய பதிவு ஒன்றை மிக கோபமாக பதிவிட்டுள்ளார். கத்திச்சண்டை படம் வெளியான போது அந்தப்படத்தின் இயக்குநர் சுராஜ் நடிகைகளைப்பற்றி கருத்து ஒன்றை பதிவு செய்திருந்தார்.

நடிகைகளுக்கு அதிக சம்பளம் கொடுப்பது குறைவான ஆடை உடுத்தி நடிக்கத்தான் என்று கூறியிருந்தார். இதற்கு பலரும் தங்களது கண்டனங்களை தெரிவித்தனர். இயக்குநர் சுராஜின் கருத்து எல்லோருக்கும் இருக்கும் கண்ணோட்டம் தான் என்பது குறிப்பிடத்தக்கது. எல்லோருடைய பார்வையாக இருக்கும் இந்தக்கருத்திற்கு பதில் அளிக்கும் வகையில் மஞ்சிமா தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அதில், “ரசிகர்கள் ஹீரோயின்களை ஆடை இல்லாமல் பார்க்கத்தான் தியேட்டருக்கு வருகிறார்கள் என்று நீங்கள் கருதினால் அது தவறு சார். அவர்கள் நல்ல திரைப்படங்களை பார்க்க வருகிறார்கள். நடிகைகளின் ஆடைக்குறைப்பை அல்ல” என்று மஞ்சிமா கருத்து தெரிவித்துள்ளார். ஆனால் இதை யாருக்கு சொல்கிறார் என்று தெரியவில்லை. புரிய வேண்டியவர்களுக்கு புரிந்தால் சரிதான்!

Comments

comments

More Cinema News: