fbpx
Connect with us

Cinemapettai

மனிஷா கொய்ராலா பிட்டு படத்தில் நடித்த கதை தெரியுமா? எல்லாமே ஒரு சாண் வயித்துக்காக தான் வித்தாங்களாம்!

Tamil Cinema News | சினிமா செய்திகள்

மனிஷா கொய்ராலா பிட்டு படத்தில் நடித்த கதை தெரியுமா? எல்லாமே ஒரு சாண் வயித்துக்காக தான் வித்தாங்களாம்!

இந்திய சினிமாவில் ஒரு புரட்சியை ஏற்படுத்திய நடிகை என்றால் அது மனிஷா கொய்ராலா தான். இந்தியாவில் உள்ள அனைத்து மொழி படங்களிலும் நடித்த பெருமை அவருக்கு உண்டு.

1970 ஆம் ஆண்டு பிறந்த மனிஷா கொய்ராலா, 1993 ஆம் ஆண்டு பாலிவுட் சினிமாவில் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து 1995 ஆம் ஆண்டு மணிரத்னம் இயக்கத்தில் வெளியான பாம்பே படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் காலடி வைத்தார்.

அதன் பிறகு தமிழ் சினிமாவில் உள்ள அனைத்து முன்னணி நடிகர்களுடனும் ஜோடி போட்டார். கமலுடன் இந்தியன், ரஜினியுடன் பாபா போன்ற படங்களின் மூலம் உச்சத்தை தொட்டார்.

இவரும் 2010 ஆம் ஆண்டு ஒருவரை திருமணம் செய்துகொண்டு இரண்டே வருடத்தில் விவாகரத்து பெற்ற நடிகை தான். பிறகு புற்றுநோய் ஏற்பட்டு மிகவும் சிரமத்திற்கு உள்ளானார்.

பின்னர் எப்படியோ போராடி அதிலிருந்து மீண்டு வந்து தற்போது புற்று நோயால் பாதிக்கப்பட்டவர்களை பாதுகாத்து வருகிறார். ஆனால் ஒரு காலத்தில் பட வாய்ப்புகள் இல்லாமல் சிரமப்பட்டுக் கொண்டிருந்த நேரத்தில் கில்மா படத்தில் நடித்தாராம்.

அந்த படம் வெளியாகி பாலிவுட் சினிமாவில் மிகவும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதுமட்டுமில்லாமல் பலரிடமிருந்தும் மனிஷா கொய்ராலாவுக்கு எதிர்ப்பு வந்தது. பணம் இல்லாத சூழ்நிலையில் மனிஷா கொய்ராலா இப்படி நடந்து கொண்டது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இன்றைக்கும் அவர் நடித்த அந்த பலான படம் சமூகவலைதளத்தில் உலா வந்து கொண்டு தான் இருக்கிறது. இன்டர்நெட் ஆதிக்கம் இல்லாத காலத்திலேயே CD கேஸ்ட் வாங்கி பார்த்தார்களாம் நம்ம ஆட்கள்.

Continue Reading
To Top