Tamil Cinema News | சினிமா செய்திகள்
மாஸ்டர் ப்ளான் போட்ட மாளவிகா மோகனன்.. நேக்கா கழட்டிவிட்ட லோகேஷ்.. ரொம்ப தப்புமா!
செமையான இயக்குனர் தற்போது சூப்பரான ஹீரோவை வைத்து மாஸ்டர் படத்தை இயக்கி வருகிறார். புத்தாண்டன்று மாஸ்டர் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரிலீஸ் ஆகி இணையத்தை பிரபலமாகிக் கொண்டிருந்தது. அப்போது படத்தின் நாயகி மாளவிகா இயக்குனர் லோகேஷ் கனகராஜ்க்கு ரூட் விட்டது தான் தற்போது கோலிவுட் ஹாட் டாப்பிக்.
ஒரு படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் டீசர் ட்ரெய்லர் போன்றவை வெளிவந்தால் அதனை அந்த படக்குழுவை சேர்ந்தவர்கள் தங்களது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்வார்கள். அந்தவகையில் மாஸ்டர் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படத்தின் நாயகி மாளவிகா தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டார்.
அதற்கு லோகேஷ் கனகராஜ் நன்றி மேடம் என பதில் அளித்தார். உடனே சும்மா இருப்பவர்களை சொரிந்து விடும் கதையாக மேடம் என்று மரியாதை கொடுத்ததற்கு மேடமா? எனக்கூறி கலாய்த்தார். அதற்கு லோகேஷ் கனகராஜ் சிரிக்கும் ஏமோஜி பதிவிட்டார்.
இதனை கண்ட தளபதி ரசிகர்கள், இந்த ரணகளத்திலும் ஒரு கிளுகிளுப்பு கேக்குது என இருவரையும் கிண்டல் செய்து வருகின்றனர். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளிவந்த மாநகரம் மற்றும் கைதி ஆகிய இரண்டு படங்களும் பெரிய வெற்றியைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.
விரைவில் மாஸ்டர் படத்தின் டீசர் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
— malavika mohanan (@MalavikaM_) December 31, 2019
https://twitter.com/Dir_Lokesh/status/1212247913390149636?s=20
