Tamil Cinema News | சினிமா செய்திகள்
எப்பவும் குடி, கும்மாளம்.. கடைசியில் நடிகைக்கு நடந்த கதி
தமிழில் பம்பாய், இந்தியன், முதல்வன் போன்ற படங்களில் நடித்து தமிழக ரசிகர்களின் மனதில் நீங்காத இடம் பிடித்தவர் மனிஷா கொய்ராலா. பிறகு பாலிவுட் சென்று அங்கேயும் நம்பர் ஒன் நடிகை என்று கொடியை பறக்க விட்டார்.
நம்பர் 1 என்ற போதை அவரை மதுவுக்கு அடிமையாக்கியது. மது பழக்கத்தினால் அவருடைய சினிமா வாழ்க்கை தடம் புரண்டது என்றே சொல்லலாம். காரணம் தான் ஒரு மிகப் பெரிய நடிகை என்ற கர்வத்தில் இருந்த மனிஷா, அந்த போதையின் சூழ்ச்சியால் வீழ்த்தப்பட்டார்.
அதிலிருந்து மீண்டு வர நினைக்காமல் முழுவதும் மதுவுக்கு அடிமையானவர். இதனால் கடந்த 2012 ஆம் ஆண்டு புற்றுநோயால் பாதிக்கப்பட்டார். பிறகு வெளிநாடு சென்ற புற்றுநோய்க்கான சிகிச்சை பெற்று தற்போது புற்றுநோய் விழிப்புணர்வு ஏற்படுத்துவதையே தற்போது தனது முழு நேர குறிக்கோளாகக் கொண்டுள்ளார்.
நான் நடிக்கும் போது என்னுடைய நடிப்பு திறமையை பேசாத மக்கள், நான் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட உடன் அதிகமாக பேசினர். இதனால் நான் மிகவும் மன உளைச்சலுக்கு ஆளானேன். மீண்டும் என்னுடைய நடிப்புத் திறமை பொழுது மக்கள் பேசும் நாள் வெகு தொலைவில் இல்லை என்று உறுதியுடன் கூறியுள்ளார்.
நன்றாக வாழ்ந்து கெட்டவர்கள் என்று இவரைக் குறிப்பிடலாம்..
