Tamil Cinema News | சினிமா செய்திகள்
காதலரை ஹீரோவாக்க மூட்டை மூட்டையாக பணம் சேர்க்கும் பிரபல நடிகை.. சட்டியில் இருந்தால் தான் அகப்பையில் வரும்!
தமிழ் சினிமாவில் உள்ள பிரபல நடிகை ஒருவர் தன்னுடைய காதலரை எப்படியாவது ஹீரோவாக்க வேண்டும் என்பதற்காக கோடிகோடியாக சம்பாதித்து மூட்டை மூட்டையாக பணத்தை சேமித்து கொண்டிருக்கிறாராம்.
தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் தான் அந்த நாயகி. ஆரம்பத்தில் இருந்தே அந்த நாயகி நடித்த அனைத்து படங்களும் சூப்பர் ஹிட்டடித்து வந்தன.
இடையில் சில பல நடிகர்கள் மற்றும் இயக்குனர்களுடன் காதலில் விழுந்து ஏமாந்தார். பின்பு அந்த நடிகை சில காலம் காதல் கத்தரிக்காய் என எதற்கும் இடம் கொடுக்காமல் நடிப்பில் கவனம் செலுத்தி வந்தார்.
இந்நிலையில் தான் அந்த இளம் இயக்குனர்கள் இயக்கிய காதல் கலாட்டா படத்தில் அந்த இயக்குனரின் மீது காதலில் விழுந்தார் அந்த முன்னணி நடிகை.
அன்றிலிருந்து கிட்டத்தட்ட 5 வருடங்களுக்கு மேலாக இருவரும் காதலித்து வரும் நிலையில் திருமணம் எப்போது என்ற கேள்விகள் தான் அவர்களை சுற்றி இருக்கிறது. ஆனால் அதையெல்லாம் கண்டுகொள்ளாமல் லிவிங் டுகெதர் முறையில் வாழ்ந்து வருகின்றனர்.
இது ஒருபுறமிருக்க சமீப காலமாக அந்த முன்னணி நடிகை தான் நடிக்கும் படங்களுக்கு அளவுக்கு அதிகமாக சம்பளம் வாங்கி வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
அந்த நடிகையை நம்பி பணம் போட தயாராக இருக்கும் தயாரிப்பாளர்களை வளைத்து போட்டு மூட்டை மூட்டையாக பணம் சேர்த்துக் கொண்டிருக்கிறார் அந்த முன்னணி நடிகை.
எதற்கு இவ்வளவு பணம் என்று கேட்டால், தன்னுடைய காதலனை எப்படியாவது ஹீரோவாக்கி தமிழ்சினிமாவில் விஜய் அஜித் ரேஞ்சுக்கு கொண்டு வர வேண்டும் என்பதே என்னுடைய ஆசை என்று கூறிவருகிறாராம்.
