ஆலியா பட் எப்போது தமிழ், தெலுங்கு படங்களில் நடிப்பார் என மொத்த ரசிகர்களும் வெயிட்டிங். ஆனால் அவர் ஹிந்தி படங்களில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறார்.

இந்நிலையில் ஆலியா பட் தனக்கு பிடித்த தென்னிந்திய நடிகர் யார் என தெரிவித்துள்ளார். சமீபத்தில் பாகுபலி படத்தில் கலக்கிய பிரபாஸ் தான் ஆலியா பட்டுக்கு பிடித்த நடிகராம்.

அவரோடு நடிக்க ஆவலாக உள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் பாகுபலி படத்தை பற்றி புகழ் தன்னிடம் வார்த்தை இல்லை எனவும், அவ்வளவு பிடித்தது எனவும் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

இதனால் விரைவில் ஆலியா பட் தென்னிந்திய சினிமாவில் கால்பதிப்பார் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.