Tamil Cinema News | சினிமா செய்திகள்
ஜூலி போல் மாறிய லாஸ்லியா.. பிக்பாஸ்ல நல்லா இருந்தீங்களேமா!
பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஒரு சிலருக்கு நல்ல எதிர்காலம் அமைந்துள்ளது என்பது நாம் கண்கூடாக பார்க்கும் நிகழ்வுகளாகும். அதேபோல் சமீபத்தில் நடந்து முடிந்த பிக் பாஸ் 3 சீசன் நிகழ்ச்சியில் மிகவும் பிரபலமான ஜோடி என்றால் கவின் மற்றும் லாஸ்லியா தான்.
முதலில் அண்ணா என்று கூப்பிட்டு வந்த லாஸ்லியா காலப்போக்கில் கவின் மீது காதல் வயப்பட்டு மேலும் கவினும் லாஸ்லியா மேல் காதல் வயப்பட்டு பிக்பாஸ் இவர்களின் மேல் காதல் வயப்பட்டு இவர்களின் காதல் காட்சியை காட்டி டிஆர்பியை ஏற்றியது. அந்த அளவு ரசிகர்களின் மனதில் ஆழமாக பதிந்த காதல் ஜோடி.
லாஸ்லியா மற்றும் கவின் ஆகியோரின் காதலின் மீது லாஸ்லியாவின் பெற்றோர்கள் சிறிதுசங்கடத்தில் இருந்தது நிகழ்ச்சியிலேயே பார்க்க முடிந்தது. இந்நிலையில் சினிமாவில் நடிப்பதற்கான பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும், அதற்காக போட்டோ ஷூட் நடத்தி பார்த்ததாகவும் தெரியவந்துள்ளது.
ஆனால் இந்த புகைப்படங்களை பார்க்கும் போது பிக் பாஸ் நிகழ்ச்சியில் அதிகம் கேவலப்படுத்த பட்ட ஜூலியை போல் இருப்பதாக நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.

losliya-01

losliya-02
