தமிழ் சினிமாவுல எந்த ஒரு நடிகையும் ஓவர் அலட்டலோட காலம் தள்ள முடியாதுங்க. எவ்ளோ பெரிய நடிகையா இருந்தாலும் இங்க கொஞ்சம் அடக்கமாத்தான் இருந்தாக வேணும். எமி ஜாக்சன்னையே தாழிச்சு எடுத்த கூட்டம் நாம. சரி இப்போ கதைக்கு வருவோம்.

ritika-singhகடந்த வருடம் வெளிவந்து மிகப்பெரிய வெற்றியடைந்த இறுதிச்சுற்று படத்தின் நாயகி ரித்திகா சிங் பத்திதான் பார்க்க போறோம். முதல் படத்துலேயே பெரிய அளவுல நடிச்சு பேரு வாங்குன நடிகை என்பதால் தமிழ்ல அடுத்தடுத்து படம் வரும்னு நினைச்சுட்டு இருந்தாங்க ரித்திகா.

Ritika Singhஅவுங்க நினைச்சது போல பட வாய்ப்புகளும் வந்துச்சு. ஆனா தமிழ்ல ஆண்டவன் கட்டளை, சிவலிங்கா இப்படி இரண்டு படங்கள் மட்டுமே தலைகாட்டினார். இரண்டு படங்கள்லையும் இவரோட கதாபாத்திரம் பெரிய அளவுல இல்லை.

இப்போ இவுங்க கைல ஒரே ஒரு தமிழ் படம்தான் இருக்கு. அந்த படத்தோட பேரு வணங்கா முடி. அரவிந்த் சாமி, நந்திதா, சிம்ரன் நடிச்சுட்டு இருக்க இந்த படம்தான் இவுங்களோட இப்போதைய ஒரே நம்பிக்கை.

இந்த நிலைமைக்கு காரணம், கதை சொல்ல வருகிற இயக்குனர்களிடம் ஹிந்தி அல்லது ஆங்கிலத்தில்தான் கதை சொல்ல வேண்டும் என்று கெடுபிடி செய்தாராம், பிறகு என் அப்பா ஓகே சொன்னால்தான் நான் நடிப்பேன் எனவே அப்பாவிடம் கதை சொல்லுங்கள்னு அலம்பல் பண்ணிட்டு இருந்தாங்களாம்.

அப்பாவும் வேணாம் நீங்களும் வேணாம்னு இயக்குனர்கள் எல்லாரும் ரித்திகா வீட்டு பக்கமே போறதில்லையாம். இதன் விளைவா இப்போ படம் இல்லாமல் தமிழ்லையே கதை சொல்லுங்க நான் எப்படியாவது புரிஞ்சுக்குறேன். என்கிட்டயே கதை சொல்லலாம் தயவு செஞ்சு சான்ஸ் கொடுங்கன்னு கெஞ்சுற நிலைமைக்கு வந்துட்டாங்களாம்.

சினிமா பேட்டை: இதெல்லாம் நேர்ல பார்த்த மாதிரியே கத சொல்றானுகளே இந்த சினிமா பேட்டைகாரப் பயலுக…