Connect with us
Cinemapettai

Cinemapettai

lalitha-kumari-news

Tamil Cinema News | சினிமா செய்திகள்

கவுண்டமணி பெயிண்ட் காமெடியில் நடித்த நடிகையை ஞாபகம் இருக்கா? இவங்க டெரர் நடிகரின் மனைவியாமே!

அந்த காலத்தில் கவுண்டமணி செந்தில் காமெடிகளுக்கு எவ்வளவு வரவேற்பு இருந்தது என்பதைப் பற்றி சொல்லித் தெரியவேண்டியதில்லை. இவர்கள் இருவரின் காமெடி காட்சிகளை பார்ப்பதற்காகவே தியேட்டர்களுக்கு படையெடுத்த மக்கள் கூட்டமும் உண்டு.

இன்னும் சொல்ல வேண்டும் என்றால் இவர்களது காமெடிக்காக ஓடிய படங்கள் நிறைய இருக்கிறது. அதிலும் கவுண்டமணியிடம் செந்தில் அடிவாங்கும் போது தியேட்டரே குலுங்கி குலுங்கி சிரிக்கும். அந்த அளவுக்கு ரசிகர்களின் மனதில் காமெடி ஜாம்பவான்களாக வாழ்ந்தவர்கள்.

அப்படி கவுண்டமணி செந்தில் கூட்டணியில் வெளியான காமெடி காட்சிகளே மிகவும் பிரபலமானது கவுண்டமணி தன்னுடைய கருப்பு நிற தங்கைக்கு சிகப்பு பெயிண்ட் அடித்து கலராக மாற்றி செந்திலுக்கு கல்யாணம் செய்து கொடுத்து விடுவார்.

அதில் கவுண்டமணியின் தங்கச்சியாக நடித்தவர்தான் நடிகை லலிதா குமாரி. இவர் பிரபல கவர்ச்சி நடிகை டிஸ்கோ சாந்தி தங்கை என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆனால் இவரை திருமணம் செய்து கொண்டது யார் என்று தெரிந்தால் அதிர்ச்சி ஆகிவிடுவீர்கள்.

இந்திய சினிமாவில் டெரர் வில்லனாக கலக்கிக் கொண்டிருக்கும் நம்முடைய பிரகாஷ்ராஜ் தான். தொண்ணூறுகளில் வளர்ந்து வரும் நடிகராக இருந்த பிரகாஷ்ராஜ் லலிதா குமாரியை 1994ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு மூன்று குழந்தைகள் இருக்கின்றனர்.

கிட்டதட்ட 15 வருடங்கள் சிறப்பாக வாழ்ந்து இவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டு கடந்த 2009ஆம் ஆண்டு விவாகரத்து செய்து கொண்டனர். பிரகாஷ்ராஜ் 2010ஆம் ஆண்டு போனி வர்மா என்பவரை இரண்டாம் திருமணம் செய்து கொண்டார்.

lalitha-kumari-prakash-raj-cinemapettai

lalitha-kumari-prakash-raj-cinemapettai

Continue Reading
To Top