Connect with us

Tamil Cinema News | சினிமா செய்திகள்

அடையாளமே தெரியாமல் மாறிப்போன குத்து ரம்யா.! புகைப்படம் உள்ளே

குத்து ரம்யா இயற்பெயர் திவ்யா ஸ்பந்தனா , இவர் வொக்கலிகர் இனத்தில் பிறந்தவர், இவர் தென்னிந்தியத் திரைப்பட நடிகையும் கர்நாடக மாநிலத்திலுள்ள மாண்டியா தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார். அவரின் தங்கை கீர்த்தனா தேவி என்றழைக்கப்படும் சஹானா இப்போது திரைத் துறையில் கால் பதித்துள்ளார்.

கன்னடத் திரையுலகில் அறிமுகமான இவர், தமிழ் மற்றும் தெலுங்கு முதலிய மொழிகளிலும் நடித்துள்ளார். திவ்யா தனது பள்ளிப்படிப்பை ஜெயின்ட் ஹில்டா மற்றும் சேக்ர்ட் ஹர்ட் பள்ளி சென்னையிலும் முடித்தார். பட்டப்படிப்பை பெங்களுரூவில் உள்ள செயின்ட் ஜோசப் கல்லூரியில் துவங்கி பாதியில் கைவிட்டார்.

Ramya

இவரின் குடும்பம் ஒரு காங்கிரஸ் கட்சியின் அரசியல் செல்வாக்கு மிகுந்த குடும்பம் ஆகும், இவரின் அம்மா காங்கிரஸின் முத்த தலைவர் ஆவார் , இவருடைய தாத்தா எஸ்.எம் கிருஷ்ணா இந்தியாவின் ஒரு மூத்த அரசியல் தலைவர் மற்றும் ஆளுநராக பணியாற்றியவர் ஆவார்.

இவர் கடந்த 2004 ம் ஆண்டு தமிழில் நடிக்க ஆரம்பித்தார் அப்பொழுது தான் இவருக்கு குத்து ரம்யா என பெயர் வந்தது. இவர் பெரும்பாலும் கன்னட படத்தில்தான் நடித்து வந்தார் குத்து ரம்யா தமிழ்ழில் கிரி,பொல்லாதவன், வாரணம் ஆயிரம், ஆகிய ஹிட் படத்தில் நடித்துள்ளார் தற்பொழுது தீவிர அரசியலில் ஈடுபட்டுள்ளார் இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.

கர்நாடக காங்கிரஸ் கட்சியின் இளம் தலைவராக இருக்கும் ரம்யா மாண்டிய பாராளுமன்ற தொகுதியின் மாநிலங்களவை உறுப்பினராக இருக்கிறார் இவர் ட்விட்டர் மற்றும் fb யில் எப்பொழுதும் ஆக்டிவாக இருப்பார் ரம்யா பாரதிய ஜனதா கட்சியை மிக நூதனமாகவும் மக்களுக்கு எளிதில் சென்று சேரும் வகையில் விமர்சனம் செய்கிறார்.

அதனால் காங்கிரஸ் கட்சியின் சமூகவலைதள தலைவராக நியமிக்க உள்ளார்கள் இதனை காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவர் ராகுல் காந்தி கூறுயுள்ளார் தற்போது கன்னடத்தில் ‘தில் க ராஜா’ என்ற ஒரு படத்தில் நடித்து வருகிறார் ரம்யா.

Continue Reading
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

To Top