சனிக்கிழமை, டிசம்பர் 14, 2024

கடும் வேதனையில் இருக்கும் குஷ்புவின் மகள்.. வாயை வச்சிக்கிட்டு சும்மா இருந்தா தானே

தமிழ் சினிமாவில் 80 காலகட்டத்தில் ரசிகர்களை தன்னுடைய அற்புதமான நடிப்பாலும் அழகாலும் கவர்ந்தவர் நடிகை குஷ்பு. முதன் முதலாக ரசிகர்களால் கோவில் கட்டப்பட்ட நடிகை என்ற பெருமையும் இவருக்கு உண்டு. அந்த அளவுக்கு இவர் ரசிகர்களின் கனவு கன்னியாக இருந்தார்.

பல வருடங்கள் சினிமாவில் நடித்து வந்த இவர் இயக்குனர் சுந்தர் சி யை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிகளுக்கு அவந்திகா, அனந்திகா என்ற இரண்டு மகள்கள் இருக்கின்றனர். திருமணத்திற்கு பிறகு குடும்ப வாழ்க்கையில் கவனம் செலுத்தி வந்த குஷ்பு தற்போது அரசியல், தயாரிப்பு, நடிப்பு என்று எல்லாத்திலும் கலக்கிக் கொண்டிருக்கிறார்.

இந்நிலையில் அவரின் மூத்த மகள் அவந்திகா கடும் மன உளைச்சலில் சிக்கி தவித்து வருவதாக கூறப்படுகிறது. அதாவது அவந்திகா தன் அம்மாவை போன்று சற்றே குண்டான உடல்வாகு கொண்டவர். சிறுவயதிலிருந்து உடல் பருமனாக இருந்த அவர் வளர்ந்த பிறகும் அதிக எடையுடன் தான் இருந்தார்.

இதைப்பார்த்த நெட்டிசன்கள் பலரும் அவரை ரொம்பவும் கேலி, கிண்டல் செய்து வந்தனர். மேலும் ஒரு சிலர் உணவு விஷயத்தில் கட்டுப்பாடுடன் இருக்க வேண்டும் என்றும், உடற்பயிற்சி செய்யுங்கள் என்றும் அவருக்கு அறிவுரை கூறி வந்தனர். பொதுவாக பிரபலமாக இருக்கும் குடும்ப உறுப்பினர்களுக்கு கூட இதுபோன்ற சங்கடங்கள் சோஷியல் மீடியாவில் ஏற்படும்.

அந்த வகையில் இதையெல்லாம் பார்த்த குஷ்புவின் மகள் தற்போது தீவிர உணவு கட்டுப்பாடு மற்றும் உடற்பயிற்சியின் மூலம் தன்னுடைய உடல் எடையை வெகுவாக குறைத்து விட்டார். தற்போது அவர் ஆள் அடையாளம் தெரியாத அளவுக்கு அம்சமாக மாறி இருக்கிறார்.

இருப்பினும் அவருடைய லேட்டஸ்ட் போட்டோவை பார்த்த நெட்டிசன்கள் அவர் பிளாஸ்டிக் சர்ஜரி செய்து உடல் எடையைக் குறைத்திருக்கிறார் என்று கண்டபடி பேசி வருகின்றனர். இது தனக்கு மிகவும் வேதனை தருவதாக அவர் தற்போது வருத்தத்துடன் கூறி இருக்கிறார்.

- Advertisement -

Trending News