ஜெயம் ரவிக்கு பதிலடி கொடுத்த குஷ்பூவின் இன்ஸ்ட்டா பதிவு.. நம்பி கல்யாணம் பண்ணி வச்சதுக்கு நல்லா பண்ணிடீங்கப்பா!

Jayam Ravi: ஜெயம் ரவி- ஆர்த்தி ரவி விவாகரத்து பிரச்சனையில் அதிகமாக அடி வாங்கியது என்னவோ குஷ்புவின் பெயர் தான். நடிகை குஷ்பு வார்த்தையின் அம்மா சுஜாதாவிற்கு நெருங்கிய தோழி. ஆர்த்திக்கு ஜெயம் ரவி மீது காதல் இருப்பதை தெரிந்துகொண்டு அந்த காதல் கை கூடுவதற்கு ரொம்பவும் உறுதுணையாக இருந்தார்.

ஜெயம் ரவி வீட்டில் இந்த காதல் விவகாரம் தெரிந்து வேண்டவே வேண்டாம் என்று சொன்னபோது குஷ்பு தான் முன்னின்று பேசி இந்த திருமணத்தை முடித்து வைத்தார். இதனால் இந்த விவாகரத்து பிரச்சனை நடந்து கொண்டிருக்கும் போது குஷ்பு ஏன் இன்னும் வாயை திறக்காமல் இருக்கிறார் என பலரும் கேள்வி எழுப்பினார்கள்.

இருவரின் காதலை உணர்ந்து திருமணம் செய்து வைத்தது ஒரு தவறு என்பது போல் சிலர் பேச ஆரம்பித்தார்கள். போதாத குறைக்கு நேற்று பிரதர் இசை வெளியீட்டு விழாவிற்கு வந்த ஜெயம் ரவி பேசிய விதம் ரசிகர்களுக்கே கொஞ்சம் கடுப்பு தான்.

நம்பி கல்யாணம் பண்ணி வச்சதுக்கு நல்லா பண்ணிடீங்கப்பா!

நமக்கே இப்படி இருக்கிறது என்றால், முன்நின்று கல்யாணம் பண்ணி வைத்த குஷ்புவுக்கு எப்படி இருந்திருக்கும். அவர் ஜெயம் ரவியிடம் என்ன சொல்ல நினைத்தாரோ அதை அப்படியே இன்ஸ்டா பதிவாக போட்டுவிட்டார். அந்தப் பதிவில் குஷ்பூ சொல்லி இருப்பதாவது;

ஒரு உண்மையான மனிதன் எப்போதும் உயரமாக நிற்பான், தனது குடும்பத்தை மற்றவைகளுக்கு மேலாக மதிப்பான். அவருடைய தேவைகள், ஆசைகள், சுதந்திரங்கள் அனைத்தும் அவரை நிபந்தனையற்ற அன்பில் பாத்திரமாகக் கொண்டவர்களின் பின் வருகின்றன.

வாழ்க்கைப் பயணத்தில் ஒவ்வொரு திருமணமும் ஏற்றங்களையும் இறக்கங்களையும் சந்திக்கும், மற்றும் தவறுகள் நிகழக்கூடும். ஆனால், இந்த தவறுகள் ஒருபோதும் ஒருவருக்கு அவர் ஆண்டு வந்த உறவுகளையோ அல்லது நிலைப்பாடுகளை விட்டு விலகுவதற்கான உரிமையை வழங்காது.

ஒரு உறவில் சில நேரங்களில் அன்பு மங்கிப்போவாலும், மதிப்பு என்றுமே உறுதியாக இருக்க வேண்டும். ஒரு உண்மையான மனிதன் தன்னுடைய குழந்தைகளைப் பெற்றெடுத்தவளை மதிப்பான், ஏனெனில் மதிப்பின்றி அவர் மனச்சாட்சியற்றவராகவே விளங்குவார்.

சுயநலமான ஒருவர் தனது செயல்கள் வளர்ந்து வரும் குழந்தைகள் மீது எவ்வாறு தாக்கம் ஏற்படுத்துகிறது என்பதைக் காணத் தவறுகிறார். இது அவருடைய மனநிலை குழப்பத்தைவும், சமயோஜிதம் மற்றும் புரிதலின் பற்றாக்குறையையும் பிரதிபலிக்கிறது.

வாழ்க்கை அழகிய ஒரு சுழற்சி. சுயநலத்திலிருந்து தோன்றும் செயல்கள் ஒருநாள் மறுபடியும் அந்த நபரையே தாக்கும். உணர்வு ஏற்பட்டபோது, கவலைப்படலாம், ஆனால் அது வெகுமதிப்படக்கூடிய ஒரு உண்மையான உணர்வு.

உங்கள் குழந்தைகளின் தாயை மதிப்பது முக்கியம் மட்டுமல்ல, அடிப்படையாகவும் இருக்கிறது. இம்மாதிரியான மதிப்பு இல்லாதால், ஒரு மனிதன் மற்றவர்களிடம் மதிப்பு பெற முடியாது, அல்லது உண்மையில் வளமாக வாழ முடியாது. தாயை மிரட்டி, அவரது பலியிடுகைக்கு ஒப்புக்கொண்டு விட்டு விலகுவது மிகுந்த கொடூரத்தை வெளிப்படுத்துகிறது.

ஒரு உண்மையான மனிதன் தன்னைத்தானே உயர்த்த விரும்பினால், முதலில் தனது குடும்பத்தை உயர்த்த வேண்டும் என்பதை அறிவார். அன்பு தளரக்கூடும், ஆனால் மதிப்பு உறவுகளை இணைக்கும் நிலையானது. .

குஷ்புவின் இந்த பதிவுக்கு ஆர்த்தியின் அம்மா சுஜாதா மை சொல் மேட் என பதிலளித்திருக்கிறார். டான்ஸ் மாஸ்டர் பிருந்தா குஷ்புவின் இந்த பதிவை பாராட்டி இருக்கிறார். அதுமட்டுமில்லாமல் இன்ஸ்டாவாசிகள் பலரும் ஜெயம் ரவியை டேக் செய்து இந்த பதிவு உங்களுக்கு தான் என சொல்லி இருக்கிறார்கள்.

Khushbu post
Khushbu post

- Advertisement -spot_img

Trending News